பிரக்ஞானந்தாவுக்கு கார் பரிசு: ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரக்ஞானந்தாவுக்கு கார் பரிசு: ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு!

இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு மின்சாரக் காரைப் பரிசாக வழங்கப்போவதாக, பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அறிவித்திருக்கிறார்.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 28, 2023, 09:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகக் கோப்பை செஸ் போட்டி, அஜர்பைஜானின் பாகு நகரில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், இளவயது செஸ் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, 2-ம் இடம் பெற்றார்.

உலகின் நம்பர் 1 செஸ் வீரரான நார்வே நாட்டின் கார்ல்சனும், பிரக்ஞானந்தாவும் இறுதிப்போட்டியில் மோதினர்.

இதில், முதல் 2 சுற்றுப் போட்டிகளும் சமனில் முடிந்தன. எனவே, டை பிரேக்கர் சுற்று நடந்தது. இதில், முதற்சுற்று போட்டியில் கார்ல்சன் வெற்றிபெற, 2-வது சுற்று டிராவில் முடிந்தது. இந்த சூழலில், 3-வது சுற்றுப் போட்டியிலும் கார்ல்சன் வெற்றிபெற்றார். 

இதன் மூலம், உலகக் கோப்பை போட்டியில் 2-ம் இடம் பெற்றார். அதேசமயம், அடுத்தாண்டு ஏப்ரல் 2 முதல் 25-ம் தேதி வரை கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெறவிருக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தகுதிப் பெற்றிருக்கிறார். இந்தச் சூழலில்தான், பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு மின்சாரக் காரைப் பரிசளிக்கப்போவதாக பிரபல தொழிலதிபர் மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “பிரக்ஞானந்தாவுக்கு பலரும் மஹிந்திரா தார் காரைப்  பரிசளிக்க வேண்டும் என கோருகிறார்கள். அவர்களது உணர்வு எனக்குப் புரிகிறது. ஆனால், என்னிடம் மற்றொரு யோசனை உள்ளது.

Appreciate your sentiment, Krishlay, & many, like you, have been urging me to gift a Thar to @rpragchess
But I have another idea …
I would like to encourage parents to introduce their children to Chess & support them as they pursue this cerebral game (despite the surge in… https://t.co/oYeDeRNhyh pic.twitter.com/IlFIcqJIjm

— anand mahindra (@anandmahindra) August 28, 2023

வீடியோ கேம்களின் மோகம் அதிகரித்துள்ள போதிலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தி அவர்கள் இந்த விளையாட்டைத் தொடர  ஊக்கப்படுத்துவதை விரும்புகிறேன்.

இது மின்சாரக் கார்களைப் போலவே நமது கிரகத்திற்கும், சிறந்த எதிர்காலத்திற்குமான முதலீடு. எனவே, பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ்.யூ.வி 400 இ.வி. காரைப் பரிசளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

பிரக்ஞானந்தாவின் பெற்றோர் தங்கள் மகனின் ஆர்வத்தை வளர்த்ததற்காகவும், அயராத ஆதரவை வழங்கியதற்காகவும் இரமேஷ்பாபு நாகலட்சுமி  ஆகியோர் நம் நன்றிக்கு உரியவர்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: chessPragyananda ChessChess Champion
Share
Tweet
SendShare
Previous Post

ஓணம் பண்டிகை!

Next Post

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies