ரிலையன்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகும் நீடா அம்பானி!
Sep 19, 2026, 07:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரிலையன்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகும் நீடா அம்பானி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 30, 2023, 11:01 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இயக்குனர்கள் குழுவில், ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோரை நியமிக்க ரிலையன்ஸ் வாரியம் பரிந்துரைத்துள்ளது. முன்னதாக இவர்களுக்கு வழிவிடும் வகையில் இயக்குனர்கள் குழுவில் இருந்து நீடா அம்பானி விலகினார்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் 46வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி, ”ஆர்ஐஎல் கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 150 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது. இது இந்தியாவில் உள்ள மற்ற நிறுவனங்களை விட அதிகம்.

ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்டின் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.9,74,864 கோடியாகவும், 2023 ஆம் நிதியாண்டில் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முந்தைய வருவாய் ரூ.1,53,920 கோடியாகவும், லாபம் ரூ.73,670 கோடியாகவும் இருந்தது” என்றார்.

மனிதவள மேம்பாடு, நியமனம் மற்றும் ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில், நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு இன்று நடைபெற்ற கூட்டத்தில், ஈஷா எம். அம்பானி, ஆகாஷ் எம். அம்பானி, ஆனந்த் எம். அம்பானி ஆகியோரை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இயக்குனர்கள் குழுவில் சேர்க்க பரிந்துரைத்தது. பங்குதாரர்களின் ஒப்புதலுக்குப் பிறகு, பதவி ஏற்கும் தேதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், நிறுவனத்தின் செயல்படாத இயக்குனர்களாக இருப்பார்கள்” என்று ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இயக்குனர்கள் குழுவில் இருந்து நீடா அம்பானி ராஜினாமாச் செய்துள்ளார். இருந்தாலும் அவர் தொடர்ந்து அனைத்து வாரியக் கூட்டங்களிலும் நிரந்தர அழைப்பாளராகப் பங்கேற்பார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீடா அம்பானியின் ராஜினாமாவை இயக்குனர்கள் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

முகேஷ் அம்பானி முதன் முதலாக 2021 ஆம் ஆண்டில் தனது வாரிசுகள் குறித்துப் பேசினார். அதன்படி, தனது மூன்று பிள்ளைகளுக்கும் தனித் தனி நிறுவன நிர்வாகங்களை ஒப்படைத்துள்ளார். புதிய ஆற்றல், வணிகம் தொடர்பான நிறுவனங்களைத் தனது இளைய மகன் ஆனந்திடமும், தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் வணிகம் மூத்த மகன் ஆகாஷ்ஷிடமும், மகள் ஈஷாவுக்கு சில்லறை வணிகத்தையும் ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.

Tags: nita ambaniambani
Share
Tweet
SendShare
Previous Post

நொய்யல் நதியை மீட்டெடுப்போம்!- அண்ணாமலை

Next Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Related News

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம் – 1,100 சிலைகள் கரைப்பு!

சென்னை தரமணியில் உலகளாவிய திறன் மையம் – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் : 2 – ம் கட்டமாக தமிழகத்தில் 25000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!

இன்றைய தங்கம் விலை!

12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் – ஒரு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னர் குண்டு வெடிக்கும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் மிரட்டல் விடுத்த இளைஞர்களிடம் விசாரணை!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies