அரசியலைத் தாண்டி, நொய்யலை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்றைய தினம், அருள்மிகு பேரூர் ஆதீன வளாகத்தில், நொய்யல் பெருவிழாவில் கலந்து கொண்டேன். தென்கயிலாய கங்கை என்றழைக்கப்படும் நொய்யல் நதியைச் சீரமைத்து, மீட்டெடுக்க, பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தலைமையில், வணக்கத்திற்குரிய சாதுக்களும், சன்னியாசிகளும் சூழ்ந்த சபையில் பேசும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
2300 ஆண்டுகளுக்கு மேல் தொன்மையான வரலாறு கொண்ட நதி நொய்யல் நதி. இரு கரைகளிலும் 260 கோவில்கள் அமைந்துள்ளன. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் என நான்கு மாவட்டங்களில் சுமார் 36,000 ஏக்கர் நிலங்களில் பாசன வசதி வழங்கிய நதி. இன்று தமிழக அரசின் ஆய்வறிக்கையின்படி, 99% பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
நதி நீரில் நச்சுப் பொருள்கள் அதிகமாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது. கோவையிலிருந்து கரூர் வரையிலான நொய்யல் நதி ஓடும் ஒவ்வொரு இடத்திலும் வேறு வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த தீர்வு நொய்யல் நதிக்குத் தேவை. இந்தியாவில் தூய்மையான நதிகள் வரிசையில் கடைசியில் இருக்கிறது தமிழகம். நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, மாசுபடுத்தல் உள்ளிட்டவை நீக்கப்பட வேண்டும்.
நம் நாட்டில் எத்தனையோ நதிகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. குஜராத்தில், சபர்மதி நதியை, அன்றைய குஜராத் முதல்வராக இருந்து நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மீட்டெடுத்து, நர்மதை நதியோடு இணைத்து, இன்று சபர்மதி நதி அத்தனை தூய்மையான நதியாக மாறியிருக்கிறது. உலகத்… pic.twitter.com/OyAQhNJxrY
— K.Annamalai (@annamalai_k) August 29, 2023
நம் நாட்டில் எத்தனையோ நதிகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. குஜராத்தில், சபர்மதி நதியை, அன்றைய குஜராத் முதல்வராக இருந்து நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீட்டெடுத்து, நர்மதை நதியோடு இணைத்து, இன்று சபர்மதி நதி அத்தனை தூய்மையான நதியாக மாறியிருக்கிறது. உலகத் தலைவர்களை, சபர்மதி நதிக்கரையில் சந்திக்கிறார் நமது பிரதமர். தமிழகத்திலும் நொய்யல் நதிக்கரையில் அமர்ந்து, நமது பிரதமர் மோடி உலகத் தலைவர்களோடு பேசும் நாள் வரும். திருவண்ணாமலையில், நாக நதியை பொதுமக்களே ஒன்றிணைந்து மீட்டெடுத்திருக்கிறார்கள். நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலமாக, இந்தச் சிறப்பான பணி நிறைவேறியதை, நமது பிரதமர் அவர்கள் மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டியுள்ளார்.
தமிழக பாஜகவைப் பொறுத்தவரை, தென் தமிழகத்தில் தாமிரபரணியையும், கொங்கு பகுதியில் நொய்யல் ஆற்றையும், கங்கை நதியை மீட்டெடுத்ததைப் போல சிறப்புப் பணியாக மீட்டெடுக்க, மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் அவர்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நிச்சயமாக நமது கோரிக்கையை நிறைவேற்றுவார் என்பதில் நம்பிக்கை இருக்கிறது.
நொய்யல் நதியை மீட்டெடுப்போம் என்ற நம்பிக்கையுடன் அரசியலைத் தாண்டி, நொய்யலை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். இன்று நொய்யல் மீட்டெடுக்கும் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் சாதுக்கள், பாலாற்றிலும், வைகையிலும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்கள். அதன் பிறகு, பாலாற்றிலும் வைகையிலும் தொடர்ச்சியாக தண்ணீர் வர ஆரம்பித்திருக்கிறது. சிறுதுளி அமைப்பு செய்யும் பணிகள் பெரியவை. நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளை மனமாரப் பாராட்டுகிறேன். அரசும், அரசு சாராத அமைப்புக்களும், பொதுமக்களும் சேர்ந்து நொய்யலை மீட்டெடுப்போம் என்று நம்பிக்கை வைப்போம். நொய்யல் நதியை இங்கு வந்திருக்கும் குழந்தைகள் காலத்தில் மீட்டெடுத்திருப்போம் என்று உறுதி ஏற்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.