நாடு முழுவதும் இன்று ரக்சா பந்தன் பண்டிகை கொண்டாடி வரும் நிலையில், கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. அதாவது. வீட்டு சமையல் சிலிண்டர் கேஸ் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று ரக்சா பந்தன் பண்டிகைக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, அனைத்து வீட்டுச் சமையல் சிலிண்டர் கேஸ் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டர் விலை ரூ.400 குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா நுகர்வோர் தங்கள் கணக்குகளில், சிலிண்டருக்கு ரூ.200 மானியம் தொடர்ந்து கிடைக்கும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த துணிச்சலான நடவடிக்கையை நாடு முழுவவதும் உள்ள பெண்கள் மனதார வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், பாஜக கூட்டணி கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் மத்திய அரசின் நடவடிக்கையைப் பாராட்டியுள்ளனர்.
ஒட்டு மொத்தமாகக் கேஸ் சிலிண்டரின் விலையைக் குறைத்தன் மூலம், மத்திய அரசுக்கு ரூ.7,500 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் நாட்டு மக்கள் நலன் கருதி இந்த துணிச்சலான நடவடிக்கை எடுத்துள்ளது.