உலகக் கோப்பை கிரிக்கெட் : 4 லட்சம் கூடுதல் டிக்கெட்கள்!
Jun 21, 2026, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் : 4 லட்சம் கூடுதல் டிக்கெட்கள்!

இரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்ய பி.சி.சி.ஐ. முடிவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 9, 2023, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு, 4 லட்சம் டிக்கெட்கள் கூடுதலாக வழங்க பி.சி.சி.ஐ. முடிவு செய்திருக்கிறது.

50 ஓவர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கிறது. இப்போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட 10 அணிகள் கலந்துகொள்கின்றன. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து மோதும் போட்டி அக்டோபர் 5-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்தாண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு கூடுதலாக 4 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய பி.சி.சி.ஐ. முடிவு செய்திருக்கிறது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ. தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உலகக் கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளுக்கான டிக்கெட் தேவை அதிகரித்திருக்கிறது. டிக்கெட்டுக்கள் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்து விடுகின்றன. இதனால், இரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும், ஐ.சி.சி. உலகக் கோப்பை 2023-ம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ டிக்கெட் பார்ட்னரான புக் மை ஷோ (BookMyShow) அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதில் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது இரசிகர்கள் சில சிரமங்களை எதிர்கொண்டனர். இதுகுறித்து இரசிகர்கள் புகார் கொடுத்தனர்.

ஆகவே, இரசிகர்களின் கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது 4 லட்சம் டிக்கெட்டுகளை கூடுதலாக வழங்க பி.சி.சி.ஐ. முன்வந்திருக்கிறது. உலகக் கோப்பைத் தொடரில் இந்தியப் போட்டிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால், இரசிகர்களுக்கு இடமளிக்க 4 லட்சம் கூடுதல் டிக்கெட்டுகளை விநியோகம் செய்யப்படவிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: ICC World CupBCCIExtra tickets4 lakhs
ShareTweetSendShare
Previous Post

சேகர் பாபுவுக்கு, தமிழக பாஜக கொடுத்த காலக்கெடு நாளையுடன் முடிகிறது!- அண்ணாமலை எச்சரிக்கை

Next Post

ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்!- அண்ணாமலை

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies