பெண்களுக்கு அதிகாரமளித்தல், ஒரு பணிக்குழுவை உருவாக்க ஜி 20 தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
Oct 29, 2026, 05:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்களுக்கு அதிகாரமளித்தல், ஒரு பணிக்குழுவை உருவாக்க ஜி 20 தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

Murugesan M by Murugesan M
Sep 11, 2023, 03:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரேசில்-லின் ஜி 20 தலைமைத்துவத்தின்போது பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த பணிக்குழுவை உருவாக்க ஜி20 தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இந்திய தலைமைத்துவத்தின் கீழ் அமைந்த ஜி20-ல், பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் பெண்களின் சக்தி கொண்டாடப்பட்டது. இது அமிர்த காலத்தை நோக்கிய பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை ஆகும்.

இந்த தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம் முதல் முறையாக பெண்கள் மேம்பாட்டில் இருந்து பெண்கள் தலைமையிலான மேம்பாடு என்ற கொள்கையில் கவனம் செலுத்தியுள்ளது.

பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான ஒரு வரலாற்று சாதனையாக, ஜி20 புதுதில்லி பிரகடனத்தில்,  காந்திநகரில் 2023 ஆகஸ்ட் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடைபெற்ற பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான ஜி 20 அமைச்சர்கள் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமைத்துவ அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

ஜி 20 புதுதில்லி பிரகடனம்- 2023 ‘பொருளாதார மற்றும் சமூக அதிகாரமளித்தலை மேம்படுத்துதல்’, ‘பெண்களின் உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வைப் பாதுகாத்தல்’ உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துகிறது.

மிக முக்கியமாக, பிரேசில் நாட்டின் ஜி20 தலைமைத்துவத்தின்போது பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த ஒரு பணிக்குழுவை உருவாக்க ஜி 20 தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். ஜி 20 தலைவர்களின் இந்த செயல்பாடு, உண்மையில் பாலின சமத்துவத்திற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் பிரதிபலிப்பாகும்.

‘பாலின சமத்துவம், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரமளித்தல்’ ஆகியவற்றில் இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இப்போது உறுதியான இடத்தைப் பெற்றுள்ளது.

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, கொரிய குடியரசு, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, பங்களாதேஷ், மொரிஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, சிங்கப்பூர், ஸ்பெயின், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற ஜி 20 நாடுகள் மற்றும் விருந்தினர் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள், பேச்சாளர்கள், பிரதிநிதிகளின் தீவிர செயல்பாடுகள், அவர்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை.

மகளிர் ஜி20 எம்பவர் (அதிகாரமளித்தல்) ஆகியவற்றின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

மாநில அரசுகள், மத்திய அமைச்சகங்கள், அறிவுசார் அமைப்புகள், எஃப்.ஐ.சி.சி.ஐ, சி.ஐ.ஐ மற்றும் பிற அமைப்புகளின் முயற்சிகளுக்கும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பாராட்டுத் தெரிவிக்கிறது.

Tags: G20
Share
Tweet
SendShare
Previous Post

பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கோலாகலம்!

Next Post

வெளிச்சந்தையில் 1.66 லட்சம் மெ.டன் கோதுமை, 0.17 லட்சம் மெ.டன் அரிசி விற்பனை- மத்திய அரசு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies