பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் தானாக இணையும்!
Sep 2, 2026, 04:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் தானாக இணையும்!

மத்திய அமைச்சர் வி.கே.சிங் உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 12, 2023, 12:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியாவுடன் தானாக இணையும் என்று மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சரும், முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங் கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் பா.ஜ.க.வின் பரிவர்த்தன் சங்கல்ப் யாத்திரையை மத்திய அமைச்சர் வி.கே.சிங் தொடங்கி வைத்தார். அப்போது அவரிடம், இந்தியாவுடனான எல்லைக் கதவைத் திறக்கக் கோரி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள ஷியா முஸ்லீம்கள் கோரிக்கை விடுத்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் வி.கே.சிங், “கொஞ்சம் பொறுத்திருங்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாகவே இந்தியாவுடன் இணையும்” என்றார். தொடர்ந்து பேசிய வி.கே.சிங், “இந்தியா தலைமையின் கீழ் சமீபத்தில் நடந்து முடிந்த ஜி20 உச்சி மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்கு முன்பு இதுபோன்றதொரு உச்சி மாநாட்டை வேறு எந்த நாடும் நடத்தியது கிடையாது.

உச்சி மாநாட்டின் பிரம்மாண்டம் உலக அரங்கில் இந்தியாவுக்கு தனித்துவமான அடையாளத்தை அளித்திருக்கிறது. இதன் மூலம் இந்தியா தனது திறமையை உலக அரங்கில் நிரூபித்திருக்கிறது. ஜி20 அமைப்பில் உலகின் அனைத்து சக்தி வாய்ந்த நாடுகளும் இடம் பெற்றிருக்கின்றன.

ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. ஆகவே, மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே, பரிவரித்தன் சங்கல்ப் யாத்திரையை தொடங்கி இருக்கிறோம். இந்த யாத்திரையில் மக்களை நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம்.

இந்த யாத்திரைக்கு மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.  பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, தேர்தலுக்கு முன்பாக மாநிலத்தின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில்லை. பிரதமரை முன்னிறுத்தித்தான் தேர்தலை சந்திக்கிறது. எனினும், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்ற, நல்ல தலைவர்களுக்கு கட்சி வாய்ப்பளிக்கும்” என்றார்.

Tags: IndiaCentral MinisterV.K.SinghPoKmerge
Share
Tweet
SendShare
Previous Post

ஜி20 மாநாடு: பிரதமர் மோடிக்கு குவியும் பாராட்டு!

Next Post

கைதிகளை விடுவிக்க ஈரானுடன் அமெரிக்கா ஒப்பந்தம் !

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies