காங்கிரஸ் ஊழலை அம்பலப்படுத்திய "ஜவான்": பா.ஜ.க. பாராட்டு!
Sep 12, 2026, 02:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் ஊழலை அம்பலப்படுத்திய “ஜவான்”: பா.ஜ.க. பாராட்டு!

ஆயுதக் கொள்முதல் முதல் ஆக்ஸிஜன் சிலிண்டர் ஊழல் வரை அம்பலம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 16, 2023, 01:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஆயுதக் கொள்முதல் ஊழல் முதல், அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இன்றி குழந்தைகள் உயிரிழந்தது வரையிலான அனைத்து ஊழல் மற்றும் முறைகேடுகளை “ஜவான்” திரைப்படம் அம்பலப்படுத்தி இருப்பதாக, பா.ஜ.க. பாராட்டுத் தெரிவித்திருக்கிறது.

தமிழ்த் திரைப்பட இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‛ஜவான்’. தந்தை, மகன் என 2 கதாபாத்திரங்களில் ஷாருக்கான் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில், வங்கிக் கடனை செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்தல், அரசு மருத்துவனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இன்றி 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்தது, ஆயுதக் கொள்முதல் ஊழல், மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களுக்குடன் அரசியல் தலைவர்கள் ஒப்பந்தம் செய்தல் உட்பட பல்வேறு பிரச்சனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில்தான், பா.ஜ.க. சார்பில் ‛ஜவான்’ திரைப்படத்துக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஜவான் திரைப்படத்தின் மூலம் 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை நினைவுப்படுத்தியதற்கு நன்றி. காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் என முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்து கிடந்தது. அதேசமயம், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, ஊழலற்ற அரசாக, தூய்மையான ஆட்சி நிர்வாகத்தை வழங்கும் அரசாக 9 ஆண்டுகளை கடந்தும் செயல்பட்டு வருகிறது. வெளிப்படைத்தன்மை, நேர்மையான ஆட்சியை வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டிருக்கிறது.

காங்கிரஸ் காலத்தில் 1.6 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதேநேரம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதோடு, பிரதமர் கிசான் சம்மன் நிதித் திட்டத்தின் மூலம் 11 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக 2.55 லட்சம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் கடனை திருப்பிச் செலுத்தாத நண்பர்களுக்கு மீண்டும் கடன் வழங்கப்பட்டது. தப்பியோடிய விஜய் மல்லையா, முந்தையக் கடனைக் கூட திருப்பி செலுத்தாமல், மேலும் கடனை நீட்டித்ததற்காக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், ராணுவத்தின் நலனில் மோடி அரசு மிகுந்த அக்கறையுடன் இருக்கிறது. நமது ராணுவ வீரர்களுக்கு 2.3 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை மோடி அரசு வழங்கி இருக்கிறது. மேலும், ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்துக்காக 1.2 லட்சம் கோடி ரூபாயை மோடி அரசு வழங்கி இருக்கிறது. அதேபோல, ராணுவத்தை வலுப்படுத்துவதற்காக ரஃபேல், அபாச்சி, ச்சினூக் ஆகியவை வாங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், கடந்த கால ஆட்சியில் குண்டு துளைக்காத ஆடைகளை வாங்குவதற்கு பதிலாக வி.வி.ஐ.பி.க்களுக்கான ஹெலிகாப்டர்களை வாங்குவதற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

புல்வாமா தாக்குதலுக்கு மோடி அரசு உடனுக்குடன் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள பால்கோட் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதேசமயம், காங்கிரஸ் ஆட்சியில் மும்பைத் தாக்குதல் நடந்தபோது, அதற்கு பதிலடி கொடுக்க துல்லியத் தாக்குதல் நடத்த ராணுவம் அனுமதி கோரியபோது, அப்போதைய அரசு அனுமதி மறுத்து விட்டது” என்று கூறியிருக்கிறார்.

Tags: scamExposedbjpCongressPraisedJawanfilm
Share
Tweet
SendShare
Previous Post

சச்சின் சவுத்ரி தாக்கல் செய்த மனு- உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

Next Post

மணல் குவாரி அதிபர்கள் 3 பேர் தலைமறைவு – அதிர்ச்சி பின்னணி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies