உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில், நடை திறக்கப்படுவதையொட்டி, ஐயப்ப பக்தர்கள் சரண கோஷமிட்டனர்.
உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில், கேரளாவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில், புரட்டாசி மாதத்தையொட்டி, திருக்கோவில் நடை திறக்கப்படுகிறது.
இன்று மாலை 5 மணிக்கு மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து வைத்து தீபம் ஏற்றுவார். இதனைத்தொடர்ந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனமும், இதனைத் தொடர்ந்து, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய் அபிஷேகத்தைத் தொடங்கி வைக்கிறார். பின்னர், கணபதி ஹோமம் நடைபெறும்.
தொடர்ந்து 22-ம் தேதி வரை, காலை, மாலை, மதியம், இரவு எனச் சிறப்புப் பூஜை நடைபெறும். ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்குப்படி பூஜை நடைபெறும். 22 -ம் தேதி இரவு திருக்கோவில் நடை அடைக்கப்படும்.
கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தேவஸ்தம் போர்டு முடுக்கவிட்டுள்ளது.