உதயநிதி ஸ்டாலினை எச்சரித்த டி.ஆர்.பாலு - வைரலாகும் வீடியோ!
Sep 12, 2026, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதயநிதி ஸ்டாலினை எச்சரித்த டி.ஆர்.பாலு – வைரலாகும் வீடியோ!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 19, 2023, 10:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை எச்சரிக்கும் வகையில், திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

திமுக எம்பி டிஆர் பாலு பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது திமுகவின் மிகப் பெரிய கூட்டம் போல் தெரிகிறது. ஒரு அரங்கத்தில் நடைபெறுவது போல் உள்ளது. இந்த கூட்டத்தில் பல நூறு பேர் அமர்ந்துள்ளனர்.

அந்த வீடியோவில் பேசிய டி.ஆர்.பாலு, திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியுள்ளார். அதை அவரே அவரது வாயால் சொல்கிறார்.

அந்த வீடியோவில் டி.ஆர்.பாலு பேசியுள்ளதாவது, இளைஞரணி தலைவரைப் பார்த்துப் பயந்து கொண்டு இருக்கிறார்கள். அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்று. அவர் அவரது அப்பாவை பார்த்தால் மட்டும் தான் பயப்படுகிறார். வேறு யாரைப்பார்த்தாலும் பயப்படுவது கிடையாது. அவர் பாட்டுக்கும் என்ன வேண்ணாலும் பேசுகிறார்.

என்ன வேண்ணாலும் பேசலாம். பேசிட்டு அதைச் சமாளிக்கலாம் என்று நினைக்கிறார். அதனால், அப்படிப் பேசுகிறார். ஆனால், தன்னுடைய கையிலே வைத்துள்ள பொருள் கீழே விழுந்து உடைந்துவிடக்கூடாதுன்னு என்ற நல்ல எண்ணத்தையும் மனதில் வைத்துக் கொண்டு அவர் மிகச்சிறப்பாக பணியாற்றுவது அவரது கடமை என்பதையும் நான் எச்சரிக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அறிவுரை சொல்லும் அளவு, டிஆர் பாலுவுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்றும், போனால் போகட்டும் என அவரது மகன் டிஆர்பி ராஜாவுக்கு, கட்சியில் பதவியும், அமைச்சரவையில் இடமும் கொடுத்தற்கு டி.ஆர்.பாலு தனது விசுவாசத்தை 10 பேர் முன்னாடி காட்டிட்டாருன்னு, இளைஞரணி நிர்வாகிகள் கொதிக்கின்றனர். இந்த விவகாரம் உதயநிதி ஸ்டாலின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு உள்ளதாம். இதைக் கேட்டு உதயநிதி ஸ்டாலின் கொதித்துப்போய் உள்ளாராம்.

இதனால், உதயநிதி ஸ்டாலினுக்கும், டி.ஆர்.பாலுவுக்கும் எந்த நேரத்திலும் நேரடியாகவே மோதல் வெடிக்கலாம் என்றும், இனி டிஆர் பாலு அறிவாலயம் பக்கம் எட்டிப்பார்க்க முடியாது திமுகவின் மேலிடத்தை நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

Tags: udhyanithitr balu
Share
Tweet
SendShare
Previous Post

6 பந்துகள் 6 சிக்ஸ்சர் அசத்திய யுவராஜ் சிங் !

Next Post

கொடிமுடி கோகிலம் நினைவு நாள் இன்று !

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies