ஒரே நேரத்தில் பண்டிகை கொண்டாடும்போது தேர்தல் நடத்த முடியாதா?
Jul 29, 2026, 02:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நேரத்தில் பண்டிகை கொண்டாடும்போது தேர்தல் நடத்த முடியாதா?

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பா.ஜ.க. பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கேள்வி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 20, 2023, 06:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நேரத்தில் பண்டிகை கொண்டாடும்போது, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாதா என்று “ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்து மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

1967-ம் ஆண்டுக்கு முன்னதாக இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் உள்ளிட்டவற்றுக்கு ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடந்தது. ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு சில மாநிலங்களில் ஆட்சியைக் கலைத்ததால், சட்டமன்றங்களுக்கு தனியாக தேர்தல் நடத்த வேண்டிய சுழல் ஏற்பட்டது. எனினும், இன்னும் பல்வேறு மாநிலங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன்தான் சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்படுகிறது. ஆகவே, நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை பா.ஜ.க. முன்வைத்து வருகிறது.

அதே சமயம், இந்த ”ஒரே நாடு ஒரே தேர்தல்” முழக்கத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. எனினும், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் மாதம் 23-ம் தேதி நடைபெறும் என்று அதன் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்திருக்கிறார். இக்கூட்டத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து விவாதம் நடத்தப்படும் என்றும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில்தான், நாடு முழுவதும் ஒரே நாளில் பண்டிகைகைள் கொண்டாடும்போது, ஏன் தேர்தலை நடத்த முடியாது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுகுறித்து மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், “நாம் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறோம். அதேபோல கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளும் நாடு முழுவதும் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி இருக்க, நாம் ஏன் தேர்தல் நாளை ஒன்றாகக் கொண்டாட முடியாது. மேலும், பெண்களுக்கான அதிகாரம் குறித்து பேசிக்கொண்டு மட்டுமே இருந்த நிலையில், பிரதமர் மோடி அரசு மசோதாவை தாக்கல் செய்து சரியான பதிலடி கொடுத்திருக்கிறது” என்றார்.

Tags: bjpone nation one electionMadya PradeshGenaral Secratary
ShareTweetSendShare
Previous Post

மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா: காங்கிரஸுக்கு அமித்ஷா பதிலடி!

Next Post

விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் வணிகர்கள் திடீர் சாலை மறியல் – முழு விவரம்

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies