நெதர்லாந்து அணிக்குப் பந்து வீசத் தேர்வான டெலிவரி பாய்
Jul 29, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெதர்லாந்து அணிக்குப் பந்து வீசத் தேர்வான டெலிவரி பாய்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 23, 2023, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க அதிகமான போட்டி உள்ளதால், பலரது கனவு கனவாகவே உள்ளது. அப்படி இருக்கையில் சென்னையைச் சேர்ந்த உணவு டெலிவரி செய்யும் லோகேஷ் குமார் உலகக் கோப்பையில் விளையாடும் நெதர்லாந்து அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

இந்தியா தலைமையேற்று நடத்தும் உலகக் கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் 5-ந் தேதி தொடங்கி நவம்பர் 19-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.

பொதுவாக இந்திய மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம், எங்கள் அணிக்கு நெட் பவுலராக இந்திய பந்துவீச்சாளர்கள் தேவை என விளம்பரம் செய்தது. இதற்காக சுமார் இந்திய வீரர்கள் 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்த நிலையில், 4 பேரை மட்டுமே நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.

அதில், சென்னையில் உணவு டெலிவரி செய்யும் லோகேஷ் குமாரும் ஒருவர். கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த இவர், உணவு டெலிவரி நேரங்கள் போக கிடைக்கும் நேரங்களில் எல்லாம் கிரிக்கெட் விளையாடி வந்தார்.

இதற்கிடையே, 4 ஆண்டுகள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஐந்தாவது டிவிஷனுக்கு விளையாடியுள்ள லோகேஷ், 4வது டிவிஷனுக்கு விளையாட பதிவு செய்திருக்கிறார். அந்த நேரத்தில் நெதர்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்த அவருக்கு நெதர்லாந்து அணி வாய்ப்பளித்துள்ளது.

ஏற்கனவே, இந்தியா வந்துள்ள நெதர்லாந்து அணி, பெங்களூருவில் உள்ள ஆலூரில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. தேர்வான 4 பேரும் நெதர்லாந்து அணியுடன் இணைந்து பயிற்சிக்காக பந்து வீசி வருகின்றனர்.

Tags: world Cup Cricketnetherland cricket
ShareTweetSendShare
Previous Post

ஐ.நா.,வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

Next Post

 கர்நாடகாவில் பாஜக கூட்டணிமேலும் பலம் பெற்றது !

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies