வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிரட்டப்பட்டனர்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு!
Jul 28, 2026, 09:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிரட்டப்பட்டனர்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு!

ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 27, 2023, 02:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலம் வளர்ச்சியடைவதற்கு அன்றைய காங்கிரஸ் அரசு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. ஆகவே, குஜராத்தில் முதலீடு செய்ய விடாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிரட்டப்பட்டனர் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருக்கிறார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அறிவியல் நகரில் “துடிப்பான குஜராத்” (வைபரண்ட் குஜராத்) என்கிற உச்சி மாநாடு இன்று நடந்தது. இம்மாநாட்டில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த 20 ஆண்டுகால துடிப்பான குஜராத் உச்சி மாநாடு மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒரு மைல்கல். துடிப்பான குஜராத் என்பது உலகின் கண்களுக்கு வெறும் பிராண்டிங் திட்டமாகத் தெரியலாம். ஆனால், இது நமக்குள் இருக்கும் ஒற்றுமையை பிரதிபலிக்கும் பிணைப்புத் திட்டமாகும்.

மேலும், இத்திட்டம் குஜராத்தின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு சேனலாகவும், உலகின் கண்களுக்கு பேசுபொருளான சேனலாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. துடிப்பான குஜராத் உச்சிமாநாட்டைப் பார்த்து பிற மாநிலங்களும் இதுபோன்ற உச்சி மாநாடு திட்டத்தை தொடங்கி இருக்கின்றன. கடந்த ஆட்சியாளர்கள் (காங்கிரஸ்) குஜராத்தின் வளர்ச்சியை அரசியலோடு தொடர்புபடுத்தினார்கள். குஜராத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, துடிப்பான குஜராத் திட்டத்தை தொடங்கியபோது, இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் அமைச்சர்கள் கலந்துகொள்ள மறுத்துவிட்டனர். மேலும், குஜராத்தில் முதலீடு செய்ய வந்த முதலீட்டாளர்களை மிரட்டி தடுக்க முயன்றனர். ஆனால், நாங்கள் குஜராத்தை மறுவடிவமைத்ததோடு, மாநிலத்தின் எதிர்காலம் குறித்தும் சிந்தித்தோம். இதன் விளைவாக, எதிர்ப்பை மீறி முதலீட்டாளர்கள் வருகை தந்தனர்.

மேலும், துடிப்பான குஜராத் திட்டம் தொடங்கப்பட்டபோது, வெளிநாட்டு விருந்தினர்கள் தங்கக் கூடிய பெரிய ஹோட்டல்கள் குஜராத்தில் இல்லை. இதனால், அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்கவைத்தோம். ஒருகட்டத்தில் அவையும் நிரம்பி விட்டதால், பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைகள் பயன்படுத்தினோம்.

ஒவ்வொரு செயலும் 3 நிலைகளைக் கடந்து வருகிறது என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார். முதலாவது, அத்திட்டம் கேலி செய்யப்படும். இரண்டாவது, எதிர்க்கப்படும். மூன்றாவது ஏற்றுக்கொள்ளப்படும். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியினரின் எதிர்ப்பையும் மீது துடிப்பான குஜராத் திட்டம் வெற்றிபெற்று, தற்போது உலகமே உற்றுப் பார்க்கும் வகையில் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில், குஜராத் முதல்வர் பூரேந்திர படேல், ஆளுநர் ஆச்சாரியா தேவவ்ரத் மற்றும் தொழில் சங்கங்கள், வர்த்தக மற்றும் வர்த்தக துறையின் முக்கிய பிரமுகர்கள், இளம் தொழில் முனைவோர், உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், 20-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், அறிவியல் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரோபோ கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

Tags: PM ModiVibrant Gujrat
ShareTweetSendShare
Previous Post

டி20 : மங்கோலிய அணி தோல்வி !

Next Post

186 ஏக்கர் நிலத்தை சுருட்டிய திமுக எம்பி – அதிர்ச்சிப் பின்னணி!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies