ரஷ்யாவின் முக்கியப் பங்காளிகளில் இந்தியாவும் ஒன்று!
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்யாவின் முக்கியப் பங்காளிகளில் இந்தியாவும் ஒன்று!

ரஷ்ய நாடாளுமன்றத் தலைவர் உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 14, 2023, 04:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆசியக் கண்டத்தில் ரஷ்யாவின் முக்கியப் பங்காளிகளில் இந்தியாவும் ஒன்று ரஷ்ய நாடாளுமன்றத் தலைவர் வாலண்டினா மத்வியென்கோ தெரிவித்திருக்கிறார்.

ஜி20 நாடாளுமன்ற உறுப்பினர்களின் உச்சி மாநாடு (பி20) தேசியத் தலைநகர் டெல்லியில் நேற்று தொடங்கியது. இம்மாநாடு இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. நேற்றைய முதல் அமர்வு ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்கிற தலைப்பில் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான நிகழ்ச்சி நிரலுடன் சாதனைகள் மற்றும் முன்னேற்றத்தை விரைவுபடுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக நடைபெற்றது.

இன்றைய 2-வது அமர்வு ஒரே பூமி நிலையான ஆற்றல் மாற்றம்-பசுமை எதிர்காலத்துக்கான நுழைவுவாயில் என்கிற தலைப்பில் நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்தோனேஷியா, மெக்சிகோ, சவூதி அரேபியா, ஓமன், ஸ்பெயின், ஐரோப்பிய நாடாளுமன்றம், இத்தாலி, தென்னாப்பிரிக்கா, ரஷ்யா, துருக்கி, நைஜீரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஜப்பான், எகிப்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுவின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டுக்கு முன்னதாக ரஷ்ய நாடாளுமன்றத் தலைவர் வாலண்டினா மத்வியென்கோ, இந்திய குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெக்தீப் தங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பின்போது, ​​சட்டப் பரிமாணத்தில் சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இருவரும் விவாதித்ததாக இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

மேலும், ஜி20 நாடாளுமன்றத் தலைவர்கள் உச்சிமாநாட்டை (பி20) சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக ஜெக்தீப் தன்கருக்கு மாட்வியென்கோ நன்றி தெரிவித்தார். அப்போது, ஆசியாவில் ரஷ்யாவின் முக்கியப் பங்காளிகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாக மாட்வியென்கோ தெரிவித்திருக்கிறார். இதுதவிர, ரஷ்யாவும், இந்தியாவும் பல நிலை இரகசிய அரசியல் உரையாடலை நடத்தி வருவதாகவும், இது இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான வழக்கமான தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.

இச்சந்திப்பு குறித்து ஜெக்தீப் தன்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் புதிதாக உருவாக்கப்பட்ட நட்புக் குழுவைத் தொடங்குவது, நாடுகளுக்கு இடையே சிறந்த தொடர்புக்கு வழி வகுக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இருவருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடல்கள் வரலாற்று ரீதியாக மக்கள் உறவுகள் மற்றும் கலாச்சார உறவை எடுத்துக் காட்டுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Tags: russiaJagdeep DhankharVice Presidentparliamentary speakermatviyenko
Share
Tweet
SendShare
Previous Post

மகாளய அமாவாசை: பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies