உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி !
Sep 13, 2026, 05:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி !

Murugesan M by Murugesan M
Oct 16, 2023, 12:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகக்கோப்பைத் தொடரில் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானதில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் படி முதலில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் இவர்களின் பாட்னெர்ஷிப் 100 ரன்களை கடந்தது.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் இவர்களின் பாட்னெர்ஷிப்பை பிரிக்க முடியாமல் இருந்த போது 16 வது ஓவருக்கு அடில் ரஷித் பந்துவீசினார்.

16 வது ஓவரின் 4 வது பந்தை இப்ராஹிம் சத்ரான் ஓங்கி அடிக்க அந்த பந்து ரூட் கைக்கு சென்றது. இதனால் இப்ராஹிம் சத்ரான் 48 பந்துகளில் 28 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக விளையாடி வந்த ரஹ்மானுல்லா குர்பாஸ் அரைசதம் எடுத்த நிலையில் சதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப் பட்டது, ஆனால் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க இக்ராம் அலிகில் 66 பந்துகளுக்கு 58 ரன்களும், முஜீப் உர் ரஹ்மான் 16 பந்துகளுக்கு 28 ரன்களும், ரஷித் கான் 22 பந்துகளுக்கு 23 ரன்களையம் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 284 ரன்களை எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக அடில் ரஷித் 3 விக்கெட்களும், மார்க் வுட் 2 விக்கெட்களும் மற்ற வீரர்கள் 1 விக்கட்டையும் எடுத்தனர்.

285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மாலன் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் ஜானி பேர்ஸ்டோவ் 4 பந்துகளுக்கு 2 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடி வந்த டேவிட் மாலன் 39 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய ஹாரி புரூக் 7 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்ஸ் என அடித்து ஆப்கானிஸ்தான் பௌலர்களை அதிரவிட்டு பின்னர் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் 40 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரஷீத் கான் 3 விக்கெட்களும் முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்களும் எடுத்தனர்.

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது 3 விக்கெட்கள் எடுத்து 28 ரங்களும் எடுத்த முஜீப் உர் ரஹ்மான்னுக்கு வழங்கப்பட்டது.

Tags: ICC World Cupengland vs afghanistan
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக காங்கிரஸ் தலைவர்களின் தியாகம் மறைப்பு – சோனியா-பிரியங்கா மீது புகார்!

Next Post

உலக உணவு தினம் !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies