தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இராணுவம் முக்கியப் பங்கு வகிக்கிறது! - ராஜ்நாத் சிங்.
Sep 12, 2026, 10:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இராணுவம் முக்கியப் பங்கு வகிக்கிறது! – ராஜ்நாத் சிங்.

Murugesan M by Murugesan M
Oct 18, 2023, 07:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இராணுவத் தளபதிகள் மாநாட்டில் இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரிகளிடையே பாதுகாப்புத் துறை அமைச்சர் உரையாற்றினார்.

2023 ஆம் ஆண்டின் இரண்டாவது இராணுவத் தளபதிகள் மாநாடு, அக்டோபர் 16 அன்று  காணொலி மூலமாகவும் நேரடியாகவும் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது, தற்போதுள்ள பாதுகாப்பு சூழ்நிலை, எல்லைகள் மற்றும் உள்பகுதியில் உள்ள நிலைமை, தற்போதைய பாதுகாப்பு நடைமுறையின் சவால்கள் ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் இராணுவத் தளபதிகள் விரிவாக விவாதித்தனர்.

 

நிறுவன சீரமைப்பு, தளவாடங்கள், நிர்வாகம் மற்றும் மனித வள மேலாண்மை தொடர்பான பிரச்சனைகளையும் இந்த மாநாடு கவனத்தில் கொண்டது.

மாநாட்டின் மூன்றாவது நாளின் சிறப்பம்சமாக  பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங், இராணுவத்தின் மூத்த  அதிகாரிகளிடையே உரையாற்றினார்.

அப்போது உரையாற்றியவர்,

நமது எல்லைகளைப் பாதுகாப்பதிலும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும் இராணுவம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த உயர்நிலை அதிகாரிகள் மாநாடு ஆயுதப்படைகளுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டிற்கும் நன்மை பயக்கும் என்று தெரிவித்தார்.

தற்போதைய சிக்கலான மற்றும் தெளிவற்ற உலக நிலைமை குறித்து வியூகங்களைத் திட்டமிடும்போதும் வகுக்கும்போதும் ஆயுதப்படைகள் இந்த அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். எதிர்பாராதவற்றை எதிர்பார்க்கவும், அதன்  அடிப்படையில் திட்டமிடவும், வியூகம் வகுக்கவும், அதற்கேற்ப தயாராகவும் இருக்க வேண்டும்.

வடக்கு எல்லைகளில், எந்தவொரு சூழ்நிலையிலும், இராணுவத்தின் மீதான முழு நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இருப்பினும், அமைதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தை அனைத்து  நிலைகளிலும் தொடரும் என்று  உறுதிபடத் தெரிவித்தார்.

“ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தலைக் கையாள்வதில் சி.ஏ.பி.எஃப் / காவல் படைகள் மற்றும் இராணுவத்திற்கு இடையேயான சிறந்த ஒருங்கிணைப்பு உள்ளது.  இது தொடர வேண்டும் என்று கூறினார்.

சமீபத்திய 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இராணுவ விளையாட்டு வீரர்களின் சிறப்பான செயல்திறனுக்காக தனது பாராட்டை தெரிவித்தார்.  முன்னணி கல்வி நிறுவனங்கள் உட்பட சிவில் தொழில்களுடன் இணைந்து, முக்கிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும், அதன் மூலம் ‘உள்நாட்டுமயமாக்கல் என்பதில் இருந்து நவீனமயமாக்கல்’ அல்லது ‘தற்சார்பு இந்தியா’ என்ற இலக்கை நோக்கி முன்னேறவும் இராணுவம் மேற்கொள்ளும் முயற்சிகளை பாராட்டினார்.

இராணுவத்தைப் பற்றி  நாடு பெருமிதம் கொள்கிறது என்றும், சீர்திருத்தங்கள் மற்றும் திறன்களை நவீனமாக்கும் பாதையில் இராணுவத்தின் முன்னோக்கிய நகர்வுக்கு உதவி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.

Tags: Rajnath Singhcentral government minister
Share
Tweet
SendShare
Previous Post

நேஷனல் ஹெரால்டு ஊழல் பற்றி பேசலாமா? ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி!

Next Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

Related News

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies