ஆர்.எஸ்.எஸ் சார்பில் காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - முழு விவரம்
Jul 28, 2026, 08:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் சார்பில் காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – முழு விவரம்

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 22, 2023, 06:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சீருடை அணிந்து அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்த காவல்துறையினர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையான அணிவகுப்பு ஊர்வலத்தை உரிய அனுமதி பெற்று விரைவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் தென்தமிழம் மாநிலத் தலைவர் ஆடலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரத தேசத்தை உன்னத நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற லட்சியத்தோடு கடந்த 98 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறது. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்). தேசபக்தி மிகுந்த சுயநலமற்ற மக்கள் சேவையே மகேசன் சேவை என்று பாடுபட்டு வரும் கோடிக்கணக்கான தொண்டர்களை கொண்டுள்ளது ஆர்எஸ்எஸ்.

பூகம்பம், புயல், வெள்ளம், சுனாமி, விபத்துக்கள், பெருந்தொற்று போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படும் போது உடனடியாக களத்திற்குச் சென்று மக்களை மீட்டு அவர்களின் துயர் துடைக்கும் பணியில் சங்கத்தின் தொண்டர்கள் ஜாதி, மத, மொழி, இன பாகுபாடு இன்றி தொண்டாற்றி வருவதை மக்கள் அறிவார்கள்.

ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்ட நாளான விஜயதசமியை முன்னிட்டும், தேசத்திற்காக பாடுபட்ட மகான்கள் நினைவை போற்றும் வகையிலும், ஆண்டுதோறும் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவது வழக்கம். சங்கம் துவங்கியதிலிருந்து இத்தகைய ஊர்வலங்கள் நாடு முழுவதும் நடக்கிறது.

காஷ்மீர் மாநிலம் முதல் கேரளா மேற்குவங்கம் என்று நாட்டின் அனைத்து பகுதிகளும் அணி வகுப்பு ஊர்வலங்கள் அமைதியாகவும், நேர்த்தியாகவும் நடந்து வருகின்றன. 1963 -ஆம் ஆண்டு டெல்லி குடியரசு தின ஊர்வலத்தில் ராணுவத்தினருடன் சேர்ந்து ஆர்எஸ்எஸ் தொண்டர்களையும் பங்கேற்க அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அழைப்பு விடுத்தார். அதை ஏற்று 3,000 ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சீருடை அணிந்து குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஊர்வலத்திற்கு சமீப காலமாக காவல்துறையினர் அனுமதி மறுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சட்டத்தை மதிக்கும் குடிமகன்களை உருவாக்கி வரும் சங்கம் காவல்துறையின் தடையை மீறாமல் அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை நீதிமன்றங்களின் மூலம் பெற்று அணிவகுப்பு ஊர்வலத்தை கடந்த ஆண்டு தமிழகத்தில் மாவட்டம் தோறும் நடத்தியது.

இந்த ஆண்டு விஜயதசமி அணிவகுப்பு ஊர்வலத்தை இன்று நடத்திய முடிவு செய்து காவல்துறையிடம் இரு மாதங்களுக்கு முன்பு அனுமதி கூறி விண்ணப்பிக்கப்பட்டது. இதில் பங்கு பெற ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் ஆர்வத்துடன் தயாராகி வந்தனர். ஆனால் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தினர். சில மாவட்டங்களில் விண்ணப்பங்களை நிராகரித்தனர். இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் அனுமதி நிகழ்ச்சி நடப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன்பே வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

ஆனால், காவல்துறையினர் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கடிதத்தை வழங்கவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தஞ்சை, விருதுநகர், கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காவல் துறை கண்காணிப்பாளர்கள், காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் ஆகிய அதிகாரிகள் மீது மதுரை மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும், அணிவகுப்பு ஊர்வலத்திற்கான அனுமதியை பெற ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையான அணிவகுப்பு ஊர்வலத்தை உரிய அனுமதி பெற்று விரைவில் ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: RSSrss tamilnaduCHENNAI RSS RALLY
ShareTweetSendShare
Previous Post

கடைசி ஏழை இருக்கும்வரை ஓய்வெடுக்கப்போவதில்லை: பிரதமர் மோடி!

Next Post

இந்தியா-கனடா உறவு சிக்கலான கட்டத்தில் இருக்கிறது: ஜெய்சங்கர்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies