ஆதி கைலாஷ் கோவிலுக்குச் சென்ற 6 பக்தர்கள் பலி!
Jul 28, 2026, 10:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆதி கைலாஷ் கோவிலுக்குச் சென்ற 6 பக்தர்கள் பலி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 26, 2023, 08:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஆதி கைலாஷ் கோவிலுக்கு புனித யாத்திரை சென்று திரும்பியபோது, பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஆதி கைலாஷ் கோவிலுக்கு, அதே மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர், தெலங்கான மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர், கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 6 பேர் புனித யாத்திரை சென்றனர். ஆதி கைலாஷ் கோவிலுக்குச் சென்று தரிசனம் முடித்து விட்டு, மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, பித்தோராகர் மாவட்டம் லகான்பூர் அருகே தார்ச்சுலா-லிபுலேக் சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறி காளி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து பித்தோராகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் லோகேஷ்வர் சிங் உத்தரவின் பேரில், காவல்துறையினரும் மற்றும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால், இரவு நேர இருள் மற்றும் பாதகமான சூழ்நிலை காரணமாக, உடல்களை மீட்கும் பணியும் தொய்வு ஏற்பட்டது.

இதுகுறித்து பித்தோராகர் மாவட்ட எஸ்.பி. லோகேஷ்வர் சிங் கூறுகையில், “ஆதி கைலாஷ் யாத்திரையை முடித்துவிட்டுத் திரும்பிய 6 பேர் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் பலியாகி விட்டனர். தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

அதேபோல, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இரங்கல் தெரிவித்திருக்கிறார். புனித யாத்திரை சென்று திரும்பியபோது விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: Uttarakhandcar fell river6-killed
ShareTweetSendShare
Previous Post

ஐப்பசி பௌர்ணமி: திருவண்ணாமலைக்குச் சிறப்பு இரயில் இயக்கம்!

Next Post

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து தோல்வி!

Related News

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

இன்றைய தங்கம் விலை!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது – ராஜா முத்துப்பாண்டி பெற்றோர் உருக்கம்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முத்துப்பாண்டிக்கு முதல்வர் பாராட்டு – ரு.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு!

கோயில் காணிக்கை கூட்டணி அமைத்து கொள்ளை – உரிய நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தல்!

அப்துல் கலாம் நினைவு தினம் – அண்ணாமலை மரியாதை!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் விசாரணைக்கு ஆஜர்!

48 மணிநேரத்தில் சுமார் 20 லட்சம் பேர் – பிரதமர் மோடியின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடரும் Followers! 

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies