போராடித் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி !
Oct 28, 2026, 04:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போராடித் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி !

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 28, 2023, 07:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இதில் டேவிட் வார்னர் 6 சிக்சர்கள் மற்றும் 5 பௌண்டரீஸ் என அடித்து நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்தை பறக்கவிட்ட டேவிட் வார்னர் 65 பந்துகளில் 81 ரன்களை அடித்து க்ளென் பந்தில் ஆட்டமிழந்தார்.

டிராவிஸ் ஹெட் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10 பௌண்டரீஸ் மற்றும் 7 சிக்சர்கள் என அடித்து 67 பந்தில் 109 ரன்களுடன் க்ளென் பந்தில் ஆட்டமிழந்தார்.

இவர்களைத் தொடர்ந்து மிட்செல் மார்ஷ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதில் மிட்செல் மார்ஷ் 36 ரன்களிலும் ஸ்டீவ் ஸ்மித் 18 ரங்களிலும் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்ன்ஸ் 18 ரன்களில் ஆட்டமிழக்க அப்போது ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 274/5 ஆகா இருந்தது.

இதைத் தொடர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்த கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் களமிறங்கினர். இதில் கிளென் மேக்ஸ்வெல் 5 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 24 பந்துகளில் 41 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் விளையாடி வந்த ஜோஷ் 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 28 பந்துகளில் 38 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 4 சிக்சர்கள் மற்றும் 2 பௌண்டரீஸ் என 14 பந்துகளில் 37 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

இதனால் 49.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 388 ரன்களை எடுத்துள்ளது.

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டிரெண்ட் போல்ட் மற்றும் க்ளென் பிலிப்ஸ் தலா 3 விக்கெட்களும் மிட்செல் சான்ட்னர் 2 விக்கெட்களும் ஜேம்ஸ் நீஷம் மற்றும் மாட் ஹென்றி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 389 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவோன் கான்வே மற்றும் வில் யங் களமிறங்கினர்.

இதில் 7 வது ஓவரில் டெவோன் கான்வே 6 பௌண்டரீஸ் அடித்து 17 பந்துகளில் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த 2 ஓவரிலேயே வில் யங் 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் அடித்து 37 பந்தில் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இவரை தொடர்ந்து வந்த ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடி 9 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்கள் என 116 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய மிட்செல் 54 ரன்களும், நீசம் 58 ரன்களும் எடுத்து கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார் இவரின் அவுட் ஆல் நியூசிலாந்து அணி வெற்றியை தவறவிட்டது.

50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 383 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஆடம் சம்பா 3 விக்கெட்களும் ஜோ மற்றும் பாட் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதனால் ஆஸ்திரேலியா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது

Tags: sportsnews
Share
Tweet
SendShare
Previous Post

நிர்வாகிகள் கைது: பா.ஜ.க. குழு கவர்னரிடம் மனு!

Next Post

குஜராத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலையால் பரபரப்பு!

Related News

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies