கோலி - ரோஹித் : முதலிடத்தை முதலில் பிடிக்கப் போவது யார் ?
Jun 15, 2026, 03:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

கோலி – ரோஹித் : முதலிடத்தை முதலில் பிடிக்கப் போவது யார் ?

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 30, 2023, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023 உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பெறும் வாய்ப்பை தவற விட்டார் விராட் கோலி.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது, இதில் விராட் கோலி இந்த தொடரில் நல்ல பார்மில் இருக்கிறார்.

ஐந்து போட்டிகளில் ஒரு சதம், மூன்று அரைசதம் அடித்து இருந்தார். இந்த நிலையில், ஆறாவதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலி சரியாக விளையாடவில்லை.

தற்போதைய உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் க்விண்டன் டி காக் 431 ரன்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். அவரை முந்தி இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க விராட் கோலிக்கு 78 ரன்கள் தேவைப்பட்டது. அவர் நல்ல பார்மிலும் இருப்பதால் அதை எளிதாக முதலிடம் செல்வார் என இரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியில் கோலி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதனால், தற்போது ஆறு போட்டிகளின் முடிவில் அவர் 354 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறார்.

ஆனால், இதேப் போட்டியில் ரோஹித் சர்மா 87 ரன்கள் குவித்தார். அவர் இதன் மூலம் ஆறு போட்டிகளில் 398 ரன்கள் குவித்து இருக்கிறார். அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

இந்தியாவின் கடைசி மூன்று லீக் போட்டிகளில் விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா இந்த பட்டியலில் முதல் இடத்தை பெறுவார்களா? என்ற எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே சமயம், க்விண்டன் டி காக், டேவிட் வார்னர், ரச்சின் ரவீந்திரா போன்ற வீரர்கள் தங்களின் உச்சகட்ட பார்மில் இருக்கிறார்கள். அவர்களை முந்துவது கடினமான ஒன்று தான்.

2023 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் க்விண்டன் டி காக் 431 ரன்கள் எடுத்தும், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 413 ரன்கள் எடுத்தும், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவிந்திரா 406 ரன்கள் எடுத்தும் இடம் பெற்றுள்ளனர்.

Tags: virat kohlirohit sharmaINDAIN CRICKET TEAM
ShareTweetSendShare
Previous Post

உலகமே விவாதிக்கும் இந்தியாவின் வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

குற்றாலம்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!

Related News

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies