வரும் நவம்பர் 12 -ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, சென்னையில் பணியாற்றுபவர்கள் தங்களது சொந்த ஊருக்கும், அதேபோல வெளியூர்களில் இருப்பவர்கள் சென்னைக்கும் பயணிக்க வேண்டி உள்ளது.
ஆனால், தமிழக அரசின் சீரற்ற நிர்வாகம் காரணமாக, சென்னையிலிருந்து முக்கிய நகரங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை.
இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே காத்துக்கிடக்கவேண்டி அவலம் நிலவுகிறது. போதாக்குறைக்கு தற்போது, ஆம்னி பேருந்துகளும் கட்டணத்தைத் தாறுமாறாக ஏற்றிவிட்டது. இதனால், தீபாவளி உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களில் சொந்த ஊர் செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு, தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக வரும் 5, 12, 19, 26 -ம் தேதிகளில் நாகர்கோவிலிருந்து அதிகாலை 4:30 மணிக்குப் புறப்படும் சிறப்பு இரயில் மாலை 4.10 மணிக்குத் தாம்பரம் சென்றடைகிறது.
மறு மார்க்கமாகத் தாம்பரத்திலிருந்து 6, 13, 20, 27 -ம் தேதிகளில் காலை 8.05 மணிக்குத் தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்பு இரயில் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.
இந்த சிறப்பு இரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ஊர்களில் நின்று சல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால், நடுத்திர மக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் பயணம் செல்ல ஏதுவாக அமைந்துள்ளது.