தமிழ் எனக்கு அதிகம் பிடிக்கும்: ஆளுநர் ஆர்.என். ரவி!
Jun 4, 2026, 04:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் எனக்கு அதிகம் பிடிக்கும்: ஆளுநர் ஆர்.என். ரவி!

Murugesan M by Murugesan M
Nov 3, 2023, 02:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருக்குறளில் உள்ள கருத்துக்கள் ஆழமானவை என்பதால், அனைவரும் அதைப் படிக்க வேண்டும் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பதக்கம் பெற்ற மாணவர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் 55-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். விழா முடிந்த பின், பதக்கம் பெற்ற பிஎச்.டி., முதுகலை, இளங்கலை மாணவர்களிடம் பிரத்தியேக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மாணவர்களிடம் அவர் கூறியதாவது: “ஐ.பி.எஸ்., பணி, ஆளுநர் பதவி இதில் எது எளிது, ஆர்வம் உள்ளது என கேட்கின்றீர்கள். எந்த பணியைச் செய்தாலும் அதில் ஆர்வத்துடன், விரும்பி செய்ய வேண்டும். அப்படித்தான் என் பணிகள் எதுவாக இருந்தாலும் விரும்பி செய்கிறேன். நேர்மையாக உள்ளேன். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்து, நடந்து சென்று தான் பள்ளிப் படிப்பை முடித்தேன். பள்ளியில் கடைசி பெஞ்ச் மாணவராக இருந்தேன். கல்வி மீது அதிக ஆர்வம் இருந்ததால், புரிந்து படித்தேன். தமிழ் எனக்கு அதிகம் பிடிக்கும். திருக்குறளில் உள்ள கருத்துக்கள் ஆழமானவை என்பதால், அனைவரும் அதை படிக்க வேண்டும்.

மாணவர்கள் ஆழமாக படித்தால் தான் கற்ற கல்வி மனதில் நிற்கும். வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக இருக்கும். வழக்கமாக இரவில் அதிகம் நேரம் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும். அதிகாலை படிப்பு தான் சிறந்தது. நான் அலைபேசியை அதிகம் பயன்படுத்துவது இல்லை. மாணவர்கள் தேவையின்றி அலைபேசியில் மூழ்கியிருக்காதீர்கள். உங்களுக்கு என ஒரு வாழ்க்கை, இலக்கு உள்ளது.

அப்துல்கலாம் கூறியது போல் ஒவ்வொருவரும் தூங்கவிடாமல் செய்யும் ஒரு கனவை காணுங்கள். அந்த கனவு பெரிதாக இருக்க வேண்டும். அது உங்களை துரத்த வேண்டும். அப்போது தான் அதை உங்களால் அடைய முடியும். பதக்கம் பெற்ற நீங்கள் சாதாரண மாணவர்கள் அல்ல. உங்களுக்காக இலக்குகள் காத்துக்கொண்டிருக்கின்றன. அதை அடைய மென்மேலும் உழைக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு நேர மேலாண்மை மிக அவசியம். திட்டமிட்டுப் படியுங்கள். வாழ்க்கையில் சாதிக்கலாம்” என்று கூறினார்.

Tags: RN Ravigoverner ravi
ShareTweetSendShare
Previous Post

தாஜ்மகால் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்: இந்து சேனா வழக்கு!

Next Post

தறிகெட்டுக் கிடக்கும் காவல்துறைக்குக் கடிவாளம் போட்ட சென்னை உயர் நீதிமன்றம்!

Related News

ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies