பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்! - வெளியுறவுத் துறை அமைச்சர்ஜெய்சங்கர்
Jun 14, 2026, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்! – வெளியுறவுத் துறை அமைச்சர்ஜெய்சங்கர்

Murugesan M by Murugesan M
Nov 3, 2023, 04:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது, அதே நேரத்தில் பாலஸ்தீனர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதும் முக்கியம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 7-ம் தேதி அன்று இஸ்ரேலின் தெற்கு பகுதியை குறிவைத்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையிலான எல்லை ஓரத்தில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டின் பகுதியில் இருந்து பலரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் சிறை பிடித்து சென்றனர். அதையடுத்து காசா மீது தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளது.

இத்தாலியில் வெளியுறவுத் துறைக்கான செனட் உறுப்பினர்கள் கூட்டத்தில்   வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார்.

அப்போது பேசிய ஜெய்சங்கர், “அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் நடந்தது கொடூரமான பயங்கரவாத தாக்குதல். அதற்குப் பிறகு நடந்த செயல்கள் அனைத்தும் அந்தப் பகுதியையே வேறு திசைக்குக் கொண்டு சென்றுள்ளது. பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது, அதே நேரத்தில் பாலஸ்தீனர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதும் முக்கியம்.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை முக்கியமானதாகும். ஒருபோதும் மோதல் மற்றும் பயங்கரவாதத்தின் மூலம் தீர்வு காண முடியாது. தற்போதைய சூழ்நிலையில் மனிதாபிமான சட்டம் மதிக்கப்பட வேண்டும்.

ஹமாஸின் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, இஸ்ரேலுக்கு முழு ஆதரவை தெரிவித்த முதல் உலக தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர். அங்கு மீண்டும் ஸ்திரத்தன்மை ஏற்படவேண்டும். அப்பகுதியில் தொடர்ந்து மோதல் நீடிக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.

Tags: MianS. Jaishankar Minister of External Affairs of India
ShareTweetSendShare
Previous Post

“இண்டி” கூட்டணி சிதைந்து விட்டது: சிவராஜ் சிங் சௌஹான் தாக்கு!

Next Post

ஈரான் போதை மறுவாழ்வு மையத்தில் தீவிபத்து: 32 பேர் பலி!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies