கடவுளை தரிசிக்க ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது பெரும் அநீதி! -வானதி சீனிவாசன்
Aug 23, 2026, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடவுளை தரிசிக்க ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது பெரும் அநீதி! -வானதி சீனிவாசன்

Murugesan M by Murugesan M
Nov 16, 2023, 06:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருவிழா வாய்ப்பை பயன்படுத்தி பக்தர்களிடம் கொள்ளை அடிப்பதா? திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும், ‘கந்த சஷ்டி விழா’ புகழ் பெற்றது. உலகெங்கும் இருந்து பல லட்சக்கணக்கான முருகப் பக்தர்கள் இதற்காக திருச்செந்தூர் வருவார்கள்.

கந்த சஷ்டியின் 6 நாட்களும் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டுமே அருந்தி விரதம் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் இக்கோயிலில் தங்குவார்கள். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான ‘சூரசம்ஹாரம்’ வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசன கட்டணங்களை, இந்து சமய அறநிலையத்துறை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

ரூ. 100 ஆக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ. 2,000 ஆகவும், ரூ. 100 ஆக இருந்த சிறப்பு தரிசன கட்டணம் ரூ. 1,000 ஆகவும், ரூ. 500 ஆக இருந்த அபிஷேக கட்டணம் ரூ. 3,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. இது முருகப் பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடவுளை தரிசிக்க ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது பெரும் அநீதி. பக்தர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல். பண்டிகைகள், திருவிழா காலங்களில் தனியார் பேருந்துகள், தனியார் வணிக நிறுவனங்கள் பல மடங்கு கட்டணங்களையும், விலையையும் உயர்த்தி மக்களிடம் முடிந்த அளவுக்கு கொள்ளை அடிக்கின்றன. அதுபோல, இந்து கோவில்களை மட்டும் தங்கள் பிடியில் வைத்துள்ள மதச்சார்பற்ற தமிழ்நாடு அரசு, பக்தர்களிடம் கொள்ளை அடிப்பதை ஏற்க முடியாது.

இது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, ஆயிரக்கணக்கில் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஏழை, எளிய மக்கள் இலவசமாக தரிசிக்கும் வகையில் ஏற்பாடுகளை, திருச்செந்தூர் கோயில் நிர்வாகமும், இந்து சமய அறநிலைத்துறையும் செய்ய வேண்டும். லட்சக்கணக்கில் பக்தர்கள் குவியும் திருச்செந்தூரில் கழிவறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: tiruchendur templebjp vanathi srinivasan
Share
Tweet
SendShare
Previous Post

நியூயார்க் மாகாணம்: தீபாவளி பண்டிகைக்குப் பொது விடுமுறை!

Next Post

5 மாநிலங்களில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது! – எல். முருகன்

Related News

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் அருகே விநாயகர் கோயில் இடிப்பு – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மந்தமாக நடைபெறுகிறது – பக்தர்கள் குற்றச்சாட்டு!

அனைத்து முதுநிலை கோயில்களிலும் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் – அமைச்சர் ரமேஷ் தகவல்!

ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

வெளிநாட்டினருக்கு விசா வழங்க விதித்திருந்த தடையை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஒடிசாவின் பாரதீப் துறைமுகம் அருகே பனாமா சரக்கு கப்பல் விபத்து – மீட்பு பணி தீவிரம்!

அசிம் முனீரிடம் குவியும் அதிகாரம் : முடியரசு ஆகும் பாகிஸ்தான் – இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? – சிறப்பு தொகுப்பு!

நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் – வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றச்சாட்டு!

கம்யூனிஸ்ட் கட்சியினரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டது மாவட்ட ஆட்சியருக்கே தெரியாது – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக தேசியப் பொறுப்பாளர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

நாட்டை சீர்குலைக்க நடந்த சதி முறியடிப்பு : பாகிஸ்தான் கைக்கூலியான Shehzad Bhatti நெட்வொர்க் அழிக்கப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

திமுக நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் – 13 பேரின் பதவி பறிப்பு?

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தலைவணங்குகிறேன் – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு சபாநாயகர், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி – தமிழக அரசு சார்பில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies