2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பாதையில் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படுகின்றன! - எல் முருகன்
Sep 12, 2026, 10:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பாதையில் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படுகின்றன! – எல் முருகன்

தொழில் வழித்தடத்தின் காரணமாக தொழில் வளர்ச்சி அதிகரித்து சென்னையும், பெங்களூரும் இரட்டை நகரங்களாக மாறும்!

Murugesan M by Murugesan M
Nov 17, 2023, 06:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சமூக உள்கட்டமைப்புகளை அதிகரிப்பது நாட்டின் வளர்ச்சியின் முக்கிய தூண்களாகும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த தமிழ்நாடு உள்கட்டமைப்பு உச்சிமாநாடு 2023ன் தொடக்க விழாவில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்,

2014-ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் அனைத்து உள்கட்டமைப்புகளும் பெரிய அளவில் மேம்படுத்தப் பட்டுள்ளதாக  கூறினார்.  பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டத்தின் கீழ் 16 அமைச்சகங்கள் இது தொடர்பான பணிகளை மேற்கொள்வதாக அவர் கூறினார்.  இத்திட்டத்தின் கீழ் சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, கடல் வழிப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்து உள்கட்டமைப்புகளும்  தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாக  தெரிவித்தார்.

2014-ம் ஆண்டில் நாட்டில் 74 விமான நிலையங்களே  செயல்பாட்டில் இருந்ததாக கூறிய  அவர் தற்போது  74 புதிய விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு அதன் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் 200 விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு பணிகளை மேற்கொள்வதாக  அவர் குறிப்பிட்டார். மெட்ரோ ரயில் வழித்தடத்தைப் பொறுத்தவரை 2014-ம்  ஆண்டு, 4 நகரங்களில் மட்டுமே இந்த வசதி இருந்தது எனவும், தற்போது 15 நகரங்களில்  மெட்ரோ ரயில் சேவைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்றும்  தெரிவித்தார்.

அனைவருக்கும் தரமான சுகாதார மற்றும் மருத்துவ வசதிகள், அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் கழிவறை வசதிகள், அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வசதி போன்றவற்றை உறுதிசெய்யும் வகையில் மத்திய அரசு செயலாற்றி வருவதாக கூறினார்.  பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 3.5 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும், தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் 11.72 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 12 கோடி வீடுகளுக்கு தூய்மையான குடிநீர் குழாய்   இணைப்பு வழங்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

2014-ம் ஆண்டில் நாட்டில் 500 புத்தொழில் நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அவற்றின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்று கூறிய அவர், புத்தொழில் சூழல் அமைப்பில் இந்தியா தற்போது உலகில் 3-வது இடத்தில் உள்ளதாக கூறினார். 2014-ம் ஆண்டில் உலகின் 10-வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், விரைவில் 3-வது இடத்திற்கு முன்னேறும் என்று  தெரிவித்தார்.

புதிய கல்விக்கொள்கை, புத்தக அறிவை மட்டுமே வழங்காமல் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் கல்வி கட்டமைப்புகளும் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.  2014-ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் புதிதாக 7 ஐஐடிகள், புதிதாக 7 ஐஐஎம்-கள் மற்றும் 390 பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டார்.

கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்கட்டமைப்புகளை மத்திய அரசு அதிகளவில் மேம்படுத்தியுள்ளது என்று  அவர் கூறினார்.  சென்னையில் முதல் கட்ட மெட்ரோ பணிகள் முடிந்து தற்போது செயல்பாட்டில் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதையும் அவர் குறிப்பிட்டார். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த துறைமுகம்- மதுரவாயல் உயர்மட்டச் சாலைப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொழில் வழித்தடத்தின் காரணமாக தொழில் வளர்ச்சி அதிகரித்து சென்னையும், பெங்களூரும் இரட்டை நகரங்களாக மாறும் என்று  அவர் கூறினார்.

நாட்டில் 7 இடங்களில்  பிரதமரின்  மெகா ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் நிலையில், அதில் தமிழ்நாட்டின் விருதுநகரில் ஒரு ஜவுளிபூங்கா அமைக்கப்படுவதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.  கொள்முதல் முதல் ஏற்றுமதி வரை அனைத்திற்குமான ஒரே மையமாக இந்த ஜவுளிபூங்கா திகழும் என்று குறிப்பிட்டார்.

நாட்டின் இரண்டு மாநிலங்களில் பாதுகாப்பு தொழில் வழித்தடம்  அமைக்கப்படுவதை குறிப்பிட்ட அவர் அதில் தமிழ்நாடும்  ஒன்று என்பதை சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டில்  நான்கு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாக அவர் கூறினார். வந்தே பாரத் ரயில்கள் மூலம் பயண நேரம் குறைவதுடன், மக்களின் வாழ்க்கை முறை எளிதாகிறது என அவர் தெரிவித்தார்.

கடந்த 9 ஆண்டுகளில் சமூக உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப் பட்டுள்ளதுடன் அதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார். அமிர்தகாலத்தின் தொடக்கத்தில் உள்ள தேசம் 2047-ம் ஆண்டு வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த இலக்கை எட்ட அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் திரு எல் முருகன் கேட்டுக் கொண்டார்.

Tags: L Murugancentral government minister
Share
Tweet
SendShare
Previous Post

சூரசம்ஹார விழா : திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!

Next Post

கோவை மாவட்டத்தில் நக்சல்கள் ஊடுருவல்?

Related News

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies