ராஜஸ்தானை காங்கிரஸ் கட்சியின் ஏ.டி.எம். ஆக்கிவிட்டார்கள்: அமித்ஷா கடும் தாக்கு!
Sep 10, 2026, 11:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தானை காங்கிரஸ் கட்சியின் ஏ.டி.எம். ஆக்கிவிட்டார்கள்: அமித்ஷா கடும் தாக்கு!

ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்தவர்கள் தலைகீழாக தூக்கிலிடப்படுவார்கள்! - அமித்ஷா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 17, 2023, 08:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலத்தை காங்கிரஸ் கட்சியின் ஏ.டி.எம். ஆக்கிவிட்டார்கள் என தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் விரைவில் நிறைவடையவிருக்கிறது. இதைத் தொடர்ந்து, இம்மாநிலத்துக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இம்மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க.வும் பகீரத முயற்சி மேற்கொண்டிருக்கின்றன. எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், “நாட்டிலேயே ஊழலில் அசோக் கெலாட்டின் அரசு தான் நம்பர் ஒன். இப்படி ஒரு ஊழல் அரசை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. இங்கு இரட்டை இன்ஜின் ஆட்சியை அமைந்ததும், இந்த ஊழலை எல்லாம் விசாரிப்போம். ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்தவர்கள் தலைகீழாக தூக்கிலிடப்படுவார்கள்.

ஒரு பக்கம், நாட்டை பாதுகாப்பாக மாற்றிய பிரதமர் மோடியின் அரசும், மறுபுறம் ராகுல் காந்தியை பிரதமராக்க முயற்சிக்கும் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. சோனியா காந்தி, ராகுல் காந்தியை 20 முறை பிரதமராக்க முயற்சி செய்தார். ஆனால், அது நடக்கவில்லை. இம்மாநிலத்தில் இரட்டை இன்ஜின் அரசை உருவாக்குங்கள். சமையல் எரிவாயு சிலிண்டர்கள் 450 ரூபாய்க்கு வழங்கப்படும்.

ஏழைகளுக்காக 16 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க முடிவு செய்திருக்கிறோம். காளி-சிந்து அணையின் பெயரில் 250 கோடி ரூபாய் ஊழல் செய்த கெலாட் அரசு, ரேஷனிலும் 1,000 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறது.

ஏழைகளின் உணவில் கூட ஊழல் செய்பவரால் ராஜஸ்தானுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. ராஜஸ்தான் முழுவதையும் காங்கிரஸ் கட்சியின் ஏ.டி.எம். ஆக்கிவிட்டார்கள். எனவே, அத்தகைய அரசை வேரோடு தூக்கி எறிய வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக நீங்கள் காங்கிரஸ் ஆட்சியைப் பார்த்திருக்கிறீர்கள்.

இந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் பெரிய அளவில் ஏதாவது செய்திருந்தால் அது ஊழல் மட்டும்தான். ஆகவே, ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் ஓட்டு போடும்போது, ​​எம்.எல்.ஏ. அல்லது பா.ஜ.க.வை தேர்வு செய்ய ஓட்டுப் போடுகிறோம் என்று நினைக்க வேண்டாம். ராஜஸ்தான் மாநிலமும் நாடும் செழிக்க ஓட்டுப் போடுகிறோம் என்று நினையுங்கள்” என்று பேசினார்.

Tags: Amit shaRajasthan election
Share
Tweet
SendShare
Previous Post

சத்தீஸ்கரில் வாக்குச்சாவடியில் குண்டு வெடிப்பு: தலைமைக் காவலர் உயிரிழப்பு!

Next Post

சென்னையில் இன்புளூயன்சா பாதிப்பு அதிகரிப்பு!

Related News

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies