சீனாவில் மசூதிகள் இடிப்பு : மனித உரிமை அமைப்பு புகார் !
Sep 20, 2026, 08:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவில் மசூதிகள் இடிப்பு : மனித உரிமை அமைப்பு புகார் !

சீனாவில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தில், சீன அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 12:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குறிப்பாக உய்கர் முஸ்லிம்கள் தனி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு, சித்தரவதை செய்யப்படுவதாக பரவலாக புகார்கள் கூறப்படுகின்றன. நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் தான் முஸ்லிம்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

ஜின்ஜியாங் மாகாணத்துக்கு அடுத்தபடியாக, நிங்ஜியா மற்றும் கான்சு மாகாணங்களில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர்.

இந்த இரண்டு மாகாணங்களில் கடந்த சில ஆண்டுகளில் பல மசூதிகளை சீன அரசு மூடியுள்ளது. குறிப்பிட்ட சுற்றளவு பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட மசூதிகள் இருக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்து, மூடப்பட்டு வருகின்றன.

சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக பல மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, ஏற்கனவே இருந்த மசூதிகளை கைப்பற்றி, அதன் கட்டட வடிவமைப்பு மாற்றப்படுகின்றன.

இது குறித்து, எச்.ஆர்.டபிள்யூ., எனப்படும் மனித உரிமை கண்காணிப்பு என்ற சர்வதேச அமைப்பு, சீனாவில் ஆய்வு செய்துள்ளது.

இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சீனத்துவமாக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக இறங்கியுள்ளது. முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக, 2016 யில் ஷீ ஜின்பிங் அதிபராக பதவியேற்றபின், சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை அதிகரித்துள்ளது. அதிகாரப்பூர்வமாகவே இது தொடர்பான அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது.

நிங்ஜியா மற்றும் கான்சு மாகாணங்களில், 2019 யில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட மசூதிகள், பல காரணங்களால்மூடப்பட்டுள்ளன.

பின், இவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக இவற்றை வழிபாட்டுக்கு பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கியுள்ளனர்.

குறிப்பாக, நிங்ஜியா மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட மசூதிகளில், மூன்றில் ஒரு பங்கு, அதாவது, 1,300 மசூதிகள் மூடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக எவ்வளவு மசூதிகள் மூடப்பட்டுள்ளன என்பதற்கான புள்ளி விபரங்கள் இல்லை. இருப்பினும், சாட்டிலைட் படங்களை வைத்து ஒப்பிடும்போது, 2019யில் இருந்த, நுாற்றுக்கும் மேற்பட்ட மசூதிகள் தற்போது இல்லை.இதைத் தவிர நுாற்றுக்கும் மேற்பட்ட மசூதிகளின் கட்டமைப்பை மாற்றியுள்ளனர்.

இதற்கிடையே ஆஸ்திரேலிய கொள்கை மையம் எடுத்துள்ள கணக்கெடுப்பின்படி, இந்த இரண்டு மாகாணங்களில் இருந்த, 16,000 மசூதிகளில், 65 சதவீத மசூதிகள், 2017ல் இருந்து அழிக்கப்பட்டுவுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

Tags: china
Share
Tweet
SendShare
Previous Post

தேனி மக்களுக்கு எச்சரிக்கை!

Next Post

8 பேருக்கு மரண தண்டனை :மேல்முறையீட்டு மனு ஏற்பு!

Related News

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies