பட்டியல் இனத்தவர்கள் மீது தாக்குதல் - மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கண்டனம்!
Sep 9, 2026, 08:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்டியல் இனத்தவர்கள் மீது தாக்குதல் – மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2023, 04:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் மீது நடைபெறும் தாக்குதலை திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்து வருவதாகவும், குற்றம் இழைத்தோரை திமுக அரசும், காவல்துறையும் உடனே கைது செய்ய வேண்டும் என்றும் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதி பெருங்குடியில், பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த 5 பேர் மீது ஒரு கும்பல் ஆயுதத்தால் வெட்டி கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 4 பேர் பெரியவர்கள் ஒருவர் 6 வயது சிறுவன் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ச்சியாகப் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் வீடு புகுந்து பட்டியலினத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரும், அவரது தங்கையும் வெட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தப் பகுதியில் ஜாதி வன்மமும், ஆயுத கலாச்சாரமும் மாணவர்களிடம் தலை தூக்குவதைத் தடுக்கத் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

அதே நாங்குநேரியில் நீதிமன்றம் அருகே கடை ஒன்றின் மீது அண்மையில் நாட்டு வெடிக்குண்டு வீசி தாக்குதல் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவங்களில் உண்மை குற்றவாளிகள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. காவல்துறை பெயரளவுக்கு வழக்குப் பதிவு செய்துவிட்டு கண்டும்காணாமலும் இருக்கிறது.

நாங்குநேரி சம்பவங்களின் பின்னணியிலும், குற்றத்தில் ஈடுபட்ட சிலருக்கு ஆதரவாகவும் உள்ளூர் திமுக நிர்வாகிகள் சிலர் இருப்பதால் தமிழக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பெட்ரோல் வெடிகுண்டு தயாரித்து, அதனை வெடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி அருகே மணிமூர்த்திஸ்வரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் குளித்துக் கொண்டு இருந்தபோது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் நடந்தது. அவர்களிடம் இருந்த செல்போன் உள்ளிட்டவற்றையும் அந்தக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.

தென் மாவட்டங்களில் ஜாதி வன்மமும், ஆயுத கலாச்சாரமும் மாணவர்களிடம் தலை தூக்குவதைத் தடுக்கத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, நான் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பல முறை கோரிக்கை வைத்தோம். ஆனால் சொந்த கட்சியினரின் தலையீடு இருப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதுவும் நடக்காதது போல வேடிக்கை பார்க்கிறார்.

இதுபோன்ற குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளைக் கண்டறியவும், ஆயுத கலாச்சசாரத்தை ஒழித்துக் கட்டவும், தமிழகக் காவல்துறையும், அந்தத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அரசின் இந்தச் செயல், சமூகங்களுக்கிடையே விரோதத்தை மறைமுகமாக ஊக்குவித்து வருகிறது. இதனால் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த சாதாரணப் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் ஜாதிய மோதல்களைத் தடுக்காமல் தொடர்ந்து தமிழக அரசு வேடிக்கை பார்த்து வருவதால் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. அண்மையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மீது சரமாரியாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று ஏராளமான பட்டியல் இன மக்கள் மீது தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே, பட்டியல் இனத்தவர்கள் மீது தாகுக்தல் நடத்துபவர்களைக் கண்டறிந்து, திமுக அரசும், காவல்துறையும் குற்றம் இழைத்தோரை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: L Murugancentral government minister
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமரின் 5 கிலோ உணவு தானியம் வழங்கும் திட்டம் நீட்டிப்பு!

Next Post

சி.ஏ.ஏ. சட்டத்தை யாராலும் தடுக்க முடியாது: அமித்ஷா உறுதி!

Related News

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies