ரூ.15.03 கோடி மதிப்பிலான கதர் மற்றும் கிராமத் தொழில்துறை பொருட்கள் விற்பனை!
Sep 19, 2026, 01:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.15.03 கோடி மதிப்பிலான கதர் மற்றும் கிராமத் தொழில்துறை பொருட்கள் விற்பனை!

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 03:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி-2023ல் வரலாற்று நிகழ்வாக ரூ.15.03 கோடி மதிப்பிலான கதர் மற்றும் கிராமத் தொழில்துறை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 2023 நவம்பர் 14 முதல் 27 வரை நடைபெற்ற 42-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி – 2023 ல் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் பங்கேற்றது.

14 நாட்கள் நடைபெற்ற இந்த சர்வதேச வர்த்தக கண்காட்சியில், கதர் ஆடை விரும்புவோர் அரங்கு எண் 3 -ல் அமைக்கப்பட்ட ‘கதர் அரங்கில்’ பெருமளவில் கொள்முதல் செய்தனர். கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்கள் இதுவரை இல்லாத வரலாற்று நிகழ்வாக ரூ.15.03 கோடி அளவிற்கு விற்பனையாகி உள்ளது.

2022-ம் ஆண்டில் நடைபெற்ற இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்களின் விற்பனை ரூ.12.06 கோடியாக இருந்தது, இது இந்த ஆண்டு 25 சதவீதம்  அதிகரித்து ரூ.15.03 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த அளவிற்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், ‘புதிய இந்தியாவின் புதிய கதர்’ தற்சார்பு இந்தியா இயக்கத்தை வழிநடத்துகிறது  என்பதைக் காட்டுகிறது என்று கதர் மற்றும் கிராம தொழில் ஆணைய தலைவர் மனோஜ் குமார் கூறினார். கதர் அரங்கிற்கு இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு சிறப்பு பாராட்டுப் பதக்கத்தையும் விருதையும் வழங்கியது.

நவம்பர் 27 அன்று கதர் இந்தியா அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நிறைவு விழாவில், இந்த ஆண்டு விற்பனையின் அடிப்படையில் பங்கேற்பாளர்களுக்கு முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகளை குமார் வழங்கினார்.

4,408,870 மதிப்புள்ள கதர் பொருட்கள் விற்பனையான கர்நாடகத்தைச் சேர்ந்த டி.என்.ஆர் சில்க் கதர் முதல் பரிசைப் பெற்றது. 3,076,600 மதிப்புள்ள கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்களை விற்பனை செய்த கர்நாடகாவின் நஸ்னீன் சில்க் கதர் இண்டஸ்ட்ரீஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கர்நாடகாவின் ஷிரின் பட்டு கதர் கிராமத் தொழில்கள் சங்கம் ரூ .2,253,570  விற்பனையுடன்  மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுதவிர விற்பனை அடிப்படையில் 10 அரங்குகளுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

Tags: In India International Trade Fair-2023
Share
Tweet
SendShare
Previous Post

புனே, ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி, மருத்துவக் கல்வியில் மிக உயர்ந்த தரத்திலான நிறுவனமாக உள்ளது!

Next Post

ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நீடிப்பாரா?

Related News

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies