தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே வெள்ள பாதிப்புக்கு தீர்வு காண முடியும்! - அண்ணாமலை
Jun 14, 2026, 12:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே வெள்ள பாதிப்புக்கு தீர்வு காண முடியும்! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Dec 7, 2023, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் 15 ஆண்டுகளாக மழை வெள்ள பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளதாகவும்,  வெள்ள பிரச்சனைக்கு பாஜக ஆட்சிக்கு வந்தால் தீர்வு காண முடியும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மழைவெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறிப்பாக வேளச்சேரி, முடிச்சூர், பள்ளிக்கரனை மற்றும் வட சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் வீடு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்படுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையான உணவு, தண்ணீர், பால் போன்றவை கிடைக்காமல் அவதி அடையும் நிலையும் உள்ளது.

இந்தநிலையில் வேளச்சேரி, ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை உள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார். தொடர்ந்து உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

மேலும் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை அண்ணாமலை வழங்கினார்.

இதனை தொடர்ந்து சென்னை மாதவரம் பகுதியில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக பாஜகவின் மாவட்ட மாநில நிர்வாகிகளுடன், நமது மாநிலத் தலைவர் அண்ணாமலை நிவாரண பொருட்களை வழங்கி அவர்களுடன் உரையாடினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,

சென்னையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். மக்களுக்கான அடிப்படை தேவையாக தண்ணீர் தான் உள்ளது.  சென்னையில் தேங்கிய மழை நீரில் கிட்டத்தட்ட 70% வடிந்துவிட்டது.

இன்னும் 30% தான் மழை நீர் தேங்கியுள்ளது. நாளைக்குள் அதுவும் மீண்டுவிடும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். மேலும்  தண்ணீர் தேங்கியுள்ள பகுதிக்கு மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டித்து வைத்துள்ளனர். எனவே இந்த வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இந்த நேரத்தில் மக்கள் தைரியமாக இருக்க வேண்டும்.

கடந்த 4 நாட்களாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அரசு அதிகாரிகளும், முன் களப்பணியாளர்களும் தொடர்ந்து களத்தில் இருக்கிறார்கள்.

சென்னை மக்கள் அதிகாரிகளை நம்புகிறார்கள் ஆனால் அரசியல்வாதிகளை நம்ப தயாராக இல்லை. எனவே அரசியல்வாதிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். திட்டங்களை சரியான முறையில் கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

15 ஆண்டுகளாக சென்னையில் மழை வெள்ள பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே வெள்ள பாதிப்புக்கு தீர்வு காண முடியும் என தெரிவித்தார்.

Tags: bjp k annamalaichennai flood
ShareTweetSendShare
Previous Post

சென்னை வெள்ள பாதிப்புகளை இன்று ஆய்வு செய்கிறார் ராஜ்நாத்சிங்!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 67.70 அடியாக அதிகரிப்பு!

Related News

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies