43 பந்துகளில் 193 ரன்கள் : யாரு சாமி நீ? ரசிகர்கள் வியப்பு!
Sep 13, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

43 பந்துகளில் 193 ரன்கள் : யாரு சாமி நீ? ரசிகர்கள் வியப்பு!

Murugesan M by Murugesan M
Dec 8, 2023, 07:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஸ்பெயினில் நடைபெற்று வரும் டி10 லீக் கிரிக்கெட் போட்டியில் ஹம்சா சலீம் தார் என்ற வீரர் 43 பந்துகளில் 193 ரன்களை விளாசியுள்ளார்.

உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு விளையாட்டு கிரிக்கெட் என்றே சொல்லலாம் அந்த   அளவிற்கு கிரிக்கெட் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிரிக்கெட் பல வடிவில் நடத்தப்படுவதுண்டு. அதில் டி20 கிரிக்கெட்டை தொடர்ந்து தற்போது டி10 கிரிக்கெட் போட்டிகளும் ஒரு சில நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.

அண்மை காலங்களில் டி20 கிரிக்கெட்டை விடவும் டி10 கிரிக்கெட் போட்டிகள் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் அதிகளவில் நடைபெற்று வருகிறது.  ஜிம்பாப்வே நாட்டில் டி10 லீக் தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஸ்பெயினில் நடைபெற்ற டி10 லீக் போட்டியில் அசாத்திய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா டி10 லீக் தொடரில் கேட்டலூன்யா ஜாக்குவார் அணியை  எதிர்த்து சோஹல் ஹாஸ்பிடலேட் அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த கேட்டலூன்யா ஜாக்குவார் அணியின் தொடக்க வீரர்களாக  ஹம்சா சலீம் தார் – யாசிர் அலி களமிறங்கினர்.

தொடக்கம் முதலே அதிரடியில் பொளந்து கட்டிய ஹம்சா சலீம், வெறும் 24 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அதன்பின் ஒவ்வொரு ஓவரிலும் அனைத்து பந்துகளையும் சிக்சர், பவுண்டரி என்று விளாசி தள்ளினார்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய ஹம்சா சலீம் 43 பந்துகளில் 22 சிக்ஸர், 14 பவுண்டரிகள் உட்பட 193 ரன்களை விளாசினார். டி10 கிரிக்கெட் லீக்கில் விளாசப்பட்ட அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் இதுதான். பவுண்டரி மற்றும் சிக்சர் மூலமாக மட்டுமே 188 ரன்களை அவர் விளாசியுள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் மட்டும் 448.84ஆக கணக்கிடப்பட்டுள்ளது.

இதன் மூலமாக கேட்டலூன்யா ஜாக்குவார் அணி 10 ஓவர்களில் 257 ரன்களை குவித்தது. இதில் சோஹல் ஹாஸ்பிடலேட் அணி தரப்பில் முகமது வாரிஸ் என்ற வீரர் வீசிய 2 ஓவர்களில் 73 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின் களமிறங்கிய சோஹல் ஹாஸ்பிடலேட் அணி  10 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 104 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் கேட்டலூன்யா ஜாக்குவார் அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.
டி10 கிரிக்கெட் லீக் தொடரில் ஹம்சா சலீம் விளையாடிய  ஆட்டத்தின் வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

ஐரோப்பா டி10 லீக் தொடரில் 3 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ள 2வது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: CricketspainCentuaryworld recordT10193 runs in 43 balls
Share
Tweet
SendShare
Previous Post

மக்களிடம் திருடப்பட்ட பணம் மீண்டும் மக்களிடமே வந்து சேரும்: பிரதமர் மோடி!

Next Post

இந்த மாத்திரைகளை பயன்படுத்தினால்… மத்திய அரசு எச்சரிக்கை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies