விலை உயர்வு எதிரொலி: வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை!
Sep 12, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விலை உயர்வு எதிரொலி: வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 9, 2023, 04:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உள்நாட்டுச் சந்தைகளில் வெங்காயம் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யவும், விலையைக் கட்டுப்படுத்தவும் 2024 மார்ச் மாதம் வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.

வெங்காயத்தின் விலை அவ்வப்போது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இதனால், சாதாரண மக்கள் பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றனர். ஆகவே, நுகர்வோரின் சிரமத்தைப் போக்கும் வகையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி வரியை டிசம்பர் 31-ம் தேதி வரை 40 சதவீதமாக நிர்ணயம் செய்தது. இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. அப்போது, மத்திய அரசு மத்திய இருப்பிலிருந்து வெங்காயத்தை விடுவித்து கிலோ 25 ரூபாய்க்கு சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்க வழிவகை செய்தது.

அதோடு, ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் விதமாக அக்டோபர் 28 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை டன் ஒன்றுக்கு 66,700 ரூபாயாக மத்திய அரசு நிா்ணயம் செய்தது. இந்த சூழலில், வெங்காயத்தின் விலை தற்போது மீண்டும் அதிகரித்திருக்கிறது. தலைநகர் டெல்லியில் 1 கிலோ வெங்காயம் 70 முதல் 80 ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகிறது.

அகில இந்திய அளவில் வெங்காயத்தின் சராசரி விலை கடந்த வியாழக்கிழமை கிலோ 57.11 ரூபாயாக இருந்தது. இது கடந்த ஆண்டு காலத்தை ஒப்பிடுகையில் 97.95% அதிகமாகும். ஆகவே, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனர் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார். இந்தத் தடை நேற்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது.

அதன்படி, இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு பெறப்பட்ட ஆர்டர்கள், கப்பலில் ஏற்றப்படும் வெங்காயங்கள், சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட வெங்காயங்கள் மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும். ஏற்கெனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கு வெங்காய ஏற்றுமதிக்கான கெடு அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

அதேசமயம், பிற நாட்டு அரசாங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், மத்திய அரசு வழங்கும் அனுமதியின் அடிப்படையில், வெங்காயம் ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, சர்க்கரை ஆலைகள், கரும்புச் சாற்றை எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை 9.75 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இதில், வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகளுக்கே பெரும்பாலான வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Tags: OnionExportINdia banned
Share
Tweet
SendShare
Previous Post

ஏழைகளின் நலன் காக்கும் அரசாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு திகழ்கிறது!

Next Post

திருநெல்வேலியில் கனமழை: வாகன ஓட்டிகள் அவதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies