ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் ஷர்மா தேர்வு!
Sep 11, 2026, 04:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் ஷர்மா தேர்வு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 12, 2023, 04:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜஸ்தான் மாநில முதல்வர் யார் என்பதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், பஜன்லால் ஷர்மா பா.ஜ.க. முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ராஜஸ்தான் உட்பட 5 மாநிலங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகின. இதில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.

இதையடுத்து, பா.ஜ.க. சார்பில் 3 மாநிலங்களுக்குமான முதல்வர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வந்தன. இதற்காக, 3 மாநிலங்களுக்குமான மத்தியப் பார்வையாளர்கள் பா.ஜ.க. தலைமையால் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களுக்குச் சென்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி முதல்வரை தேர்வு செய்தார்கள்.

அந்த வகையில், கடந்த 10-ம் தேதி அர்ஜூன் முண்டா தலைமையிலான மத்தியப் பார்வையாளர்கள் குழு சத்தீஸ்கர் மாநிலத்துக்குச் சென்று, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி, விஷ்ணு தியோ சாயை அம்மாநில முதல்வராகத் தேர்வு செய்தது.

தொடர்ந்து, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான மத்தியப் பார்வையாளர்கள் குழு, மத்தியப் பிரதேச மாநிலத்துக்குச் சென்று, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி, மோகன் யாதவை அம்மாநில முதல்வராகத் தேர்வு செய்தது.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில முதல்வரை தேர்வு செய்வதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான மத்தியப் பார்வையாளர்கள் குழு சென்றது. தொடர்ந்து, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கப்பட்டது. அப்போது, புதிய முதல்வராக பஜன் லால் ஷர்மா ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

Tags: bjpRajasthanCM candidateBajan lal Sharma
Share
Tweet
SendShare
Previous Post

ஊட்டி மலைப்பாதையில் பற்றி எரியும் லாரி – காரணம் என்ன? 

Next Post

காங்கிரஸ் ஊழலின் வேர்! – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

Related News

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா – கட்டிட மேற்கூரைகளில் பக்தர்கள் ஏற தடை!

மடப்புரம் அஜித்குமார் வழக்கு – மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வழக்கு!

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு சார்பில் சிலை வழங்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் புறப்பட்டார் முதல்வர் விஜய்!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies