வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்கள்: யு.ஜி.சி. எச்சரிக்கை!
Sep 13, 2026, 12:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்கள்: யு.ஜி.சி. எச்சரிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 16, 2023, 03:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

யு.ஜி.சி.யால் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, எட்டெக் நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் வழங்கும் பட்டங்கள் செல்லாது என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இந்தியாவில் செயல்படும் சில உயர்கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு கல்லூரிகளுடன் இணைந்து யு.ஜி.சி.யால் அங்கீகரிக்கப்படாத படிப்புகள் வழங்குவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சில எட்டெக் நிறுவனங்கள் செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில், சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆன்லைன் பட்டம் மற்றும் டிப்ளமோ திட்டங்களை வழங்குவதாக விளம்பரம் செய்து வருகின்றன.

இதையறிந்த பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) இதுபோன்ற நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் எதுவும் செல்லுபடியாகாது என்று தெரிவித்திருப்பதோடு, இதுபோன்ற படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இதுகுறித்து யு.ஜி.சி. வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அனைத்து நிறுவனங்களும் யு.ஜி.சி.யின் இந்தியாவில் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களின் வளாகங்களை அமைத்தல் மற்றும் இயக்குதல் விதிமுறைகள் 2023 மற்றும் யு.ஜி.சி.யின் இந்திய மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான கல்விக் கூட்டுறவை இணைந்து டுவின்னிங் ப்ரோகிராம், ஜாயிண்ட் டிகிரி, டூயல் டிகிரி ஒழுங்குமுறைகள் 2022 ஆகியவற்றின் கீழ் ஒப்புதல் பெற்ற பிறகுதான் படிப்புகளை தொடங்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட 2 விதிகளின்படி, பிரான்சைஸ் ஏற்பாட்டில் எந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் இந்தியாவில் பட்டப்படிப்புகளை வழங்க முடியாது. அப்படி வழங்கும் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் செல்லுபடியாகாது. மேலும், இதுபோன்ற படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பதோடு, மேற்கண்ட கல்வி நிறுவனங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கல்லூரிகள் தொடங்குவதற்கான யு.ஜி.சி.-ன் விதிகளின்படி, சர்வதேச அளவில் முதல் 500 இடங்களை பிடித்துள்ள கல்லூரிகள் மட்டுமே இந்தியாவில் வளாகங்களை நிறுவ முடியும். மறுபுறம், ஒரு மாணவர் ஒரே பல்கலைக்கழகத்தில் அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து ஒரே நேரத்தில், 2 முழுநேர படிப்புகளை தொடர அனுமதிக்கப்படுவார் என்று டூயல் டிகிரி வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. மாணவர் படிப்பின்போது, தான் பயிலும் ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்தபட்சம் ஒரு செமஸ்டர் படிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: foreign universitiesonline degree coursesugc warns
Share
Tweet
SendShare
Previous Post

நமது படைகளின் தியாகம் தைரியத்தின் தூணாக இருக்கும் : அமித் ஷா 

Next Post

2026-ல் இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்: நிதி ஆயோக் மாஜி தலைவர்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies