இந்திய அணிக்கு 117 ரன்கள் வெற்றி இலக்கு!
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய அணிக்கு 117 ரன்கள் வெற்றி இலக்கு!

Murugesan M by Murugesan M
Dec 17, 2023, 04:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில்  தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.  3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க  வீரர்களாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் டோனி டி ஜோர்ஜி களமிறங்கினர். இதில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 2வது ஓவரில் அர்ஷிதீப் சிங் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அவரையடுத்து களமிறங்கிய ரஸ்ஸி வான் டெர் டுசென் அடுத்த  பந்திலேயே டக் அவுட் ஆகி சென்றார். அப்போது தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்கோர் இரு விக்கெட் இதுப்புக்கு 3 ஆக இருந்தது. இதனைத் தொடர்ந்து தொடக்க வீரராக களமிறங்கிய டோனி டி ஜோர்ஜி போராடி 28 ரன்களை எடுத்து அர்ஷிதீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா  அணியின் கேப்டன் ஐடன் மார்க்ராம் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ 33 ரன்களை எடுத்தார்.

இதனால் 28வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணியில்  அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 5 விக்கெட்களும், ஆவேஷ் கான் 4 விக்கெட்களும் வீழ்த்தினர். குலதீப் யாதவ் ஒரு விக்கெட்டை எடுத்தார்.  தற்போது இந்திய அணிக்கு 117 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags: Indiasouth africaKL Raghulfirst one day matchODIindvssa
Share
Tweet
SendShare
Previous Post

ரூ.12,000 இழப்பீடு கோரி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!

Next Post

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் துரதிருஷ்டவசமானது: பிரதமர் மோடி!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies