தூத்துக்குடியில் இயல்பு நிலைக்குத் திரும்பிய இரயில் சேவை!
Oct 18, 2026, 07:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடியில் இயல்பு நிலைக்குத் திரும்பிய இரயில் சேவை!

Murugesan M by Murugesan M
Dec 22, 2023, 11:34 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தூத்துக்குடி இரயில் நிலையத்தில் வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து, ஐந்து நாட்களுக்கு பிறகு இன்று சென்னை – தூத்துக்குடி இடையே இரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த வாரம் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கியது.

நான்கு மாவட்டங்களிலும் வரலாறு காணாத வகையில், பெய்த கனமழையால், பெரும்பாலான சாலைகளையும், குடியிருப்புகளையும், இரயில் தண்டவாளங்களையும் வெள்ளம் சூழ்ந்து குளம் போல் காட்சியளித்தன. இதனால், தூத்துக்குடியில் இரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடியில் மழை தற்போது ஓய்ந்துள்ளது. இரயில் தண்டவாளங்களில் தேங்கியிருந்த வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி இரயில் நிலையத்திலிருந்து முதற்கட்டமாக நேற்று மாலை மைசூர் எக்ஸ்பிரஸ் இரயில் இயக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சென்னையில் இருந்து ஐந்து நாட்களுக்குப் பின்பு முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிக்கு இரயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தது.

நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரயில், இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்தது. திருச்செந்தூர் இரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்செந்தூரில் இருந்து எழும்பூர் செல்லும் விரைவு இரயில் திருநெல்வேலியில் இருந்து இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதேபோல், திருச்செந்தூர் – பாலக்காடு செல்லும் இரயில் மதியம் 1.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து செல்லும் என்று தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.

Tags: Indian Railwaytrain
Share
Tweet
SendShare
Previous Post

திருத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்கள், ஏழைகள், விளிம்புநிலை மக்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும்! – பிரதமர் மோடி

Next Post

5000 லட்சம் கோடியில் ஒரு சிறு பகுதிதான் பொன்முடியிடம் சிக்கியது!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies