தமிழக வெள்ள பாதிப்பு : பிரதமர் அலுவலக உயர்மட்ட ஆய்வுக்கூட்டம்!
Jul 29, 2026, 10:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக வெள்ள பாதிப்பு : பிரதமர் அலுவலக உயர்மட்ட ஆய்வுக்கூட்டம்!

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து  பிரதமர் அலுவலகத்தின் உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. கொட்டித்தீர்த்த மழையால் குடியிருப்புகள் வெள்ளத்தில்  மூழ்கின. தொலைபேசி, சாலைப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் மழை பாதிப்பில் இருந்து சற்று மீண்டு வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனையடுத்து மீட்பு நடவடிக்கையில்,கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய நிதி  அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் ஆய்வு செய்கிறார்.

இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து  பிரதமர் அலுவலகத்தின் உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), தேவைப்படும் பட்சத்தில் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ஆயுதப் படைகளின் உதவி குறித்தும் விவாதிக்கப்பட்டது.  சேதத்தை மதிப்பிடுவதற்கு அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழுவின் வருகை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags: National Disaster Response ForceTamil Nadu floodpmo officehigh-level meetingPMO officials
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் ஐபிஎல் தொடரில் இணையும் சுரேஷ் ரெய்னா?

Next Post

பீகார் மக்களை கொச்சைப்படுத்தும் திமுக! – அண்ணாமலை கண்டனம்!

Related News

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies