இராமருக்கு தங்கக் காலணிகள்: அயோத்திக்கு பக்தர் நடைப்பயணம்!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமருக்கு தங்கக் காலணிகள்: அயோத்திக்கு பக்தர் நடைப்பயணம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 7, 2024, 01:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி இராமஜென்ம பூமியில் கட்டப்பட்டு வரும் இராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் இராம் லல்லா சிலைக்கு, காணிக்கையாக வழங்கவிருக்கும் தங்க காலணிகளை சுமந்தபடி, ஐதராபாத் பக்தர் நடைப்பயணம் செல்கிறார்.

அயோத்தியிலுள்ள இராமஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாயில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. விழாவை முன்னிட்டு, அயோத்தி நகரம் மட்டுமல்ல நாட்டின் பல்வேறு பகுதிகளும் விழாக்கோலம் பூண்டு வருகிறது.

மேலும், அயோத்தி இராமர் கோவிலுக்கு பக்தர்கள் பலரும் காணிக்கையாக பல்வேறு பொருட்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், ஐதராபாத்தைச் சேர்ந்த இராம பக்தர் ஒருவர், அயோத்தி ஸ்ரீராமருக்காக தங்க முலாம் பூசப்பட்ட காலணிகளை காணிக்கையாக வழங்கவிருக்கிறார். இதை அயோத்தி கோவிலில் ஒப்படைப்பதற்கு பாதயாத்திரையாக அயோத்திக்கு செல்கிறார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சல்லா சீனிவாச சாஸ்திரி. தீவிர இராம பக்தரான இவர், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமருக்காக 65 லட்சம் ரூபாய் மதிப்பில், ஐம்பொன்னால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்ட காலணிகளை காணிக்கையாக வழங்க முடிவு செய்தார்.

மேலும், அக்காலணிகளை தனது தலையில் சுமந்தபடி, ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு சுமார் 8,000 கி.மீ. தூரத்துக்கு புனித நடைப்பயணமாக சென்று வழங்கத் திட்டமிட்டார். அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20-ம் தேதி, காலணிகளை தலையில் சுமந்தபடி ராமேஸ்வரத்தில் இருந்து தனது நடைப்பயணத்தைத் தொடங்கினார்.

இதனிடையே, தீடீரென லண்டன் செல்ல வேண்டி இருந்ததால், சீனிவாச சாஸ்திரி, தனது நடைப்பயணத்தை சில நாட்கள் ஒத்திவைத்தார். பின்னர், மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தவர், தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகூடம் என்னும் இடத்தில் தனது நண்பர்களுடன் தங்கி இருக்கிறார்.

இந்த இடத்தில் இருந்து அயோத்தி நகரம் சுமார் 272 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆகவே, இன்னும் 10 நாட்களில் அவர் அயோத்திக்குச் செல்ல வேண்டும் என்பதால், தினமும் 30 கி.மீ. நடக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து சீனிவாச சாஸ்திரி கூறுகையில், “ஆஞ்சநேயரின் தீவிர பக்தரான எனது தந்தை அயோத்தியில் நடந்த கர சேவையில் கலந்து கொண்டார். அயோத்தியில் இராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது அவரது விருப்பம். தற்போது எனது தந்தை இல்லை.

எனினும், எனது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில், பகவான் ஸ்ரீராமருக்காக தங்க முலாம் பூசப்பட்ட காலணிகளை தலையில் சுமந்தபடி புனிதப் பயணமாக வந்திருக்கிறேன். இன்னும் சில தினங்களில் அயோத்தியை சென்றடைவேன். அங்கு இந்த புனித காலணிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் வழங்குவேன்.

இராமர் கோவில் கட்டுவதற்காக ஏற்கெனவே 5 வெள்ளி செங்கல்களை வழங்கி இருக்கிறேன். தற்போது சிலரின் நன்கொடை உதவியுடன் இந்த புனித காலணிகளை செய்திருக்கிறேன். எனது மகன் சல்லா பவன் குமார், ஒரு சவுண்டு இன்ஜினீயர். அவர் பல திரைப்பட ஸ்டூடியோக்களில் பணிபுரிந்திருக்கிறார்” என்றார்.

Tags: Ram TempleAyodyaDevoteeGolden SlippersWalking
Share
Tweet
SendShare
Previous Post

அசாம் எல்லையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Next Post

வராக நதியில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies