வராக நதியில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
Oct 27, 2026, 09:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வராக நதியில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Jan 7, 2024, 01:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேனி வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.  தேனியில் உள்ள பெரும்பாலான அணைகள், குளங்கள், கண்மாய்கள் முழு கொள்ளளவை  எட்டி உள்ளன. இதனை அடுத்து அணைகள் மற்றும் கண்மாய்களின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. குறிப்பாக, போடி, குரங்கணி, கொட்டக்குடி ஆகிய பகுதிகளில்  பெய்த மழையால், கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் டுபட்டுள்ளனர். இதேபோல் சோத்துப்பாறை, கும்பக்கரை, பெரியகுளத்தில் தொடர் மழையால், வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் இரு கரையையும் ஒட்டியவாறு தண்ணீர் கரைபுரண்டு செல்கிறது.

இதனால், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் மற்றும் சுற்றுவட்டார வராக நதி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிக்க வைக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல், 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம், முழு கொள்ளளவை எட்டியுள்ளது.  அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 2 ஆயிரத்து 481 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags: theniWestern GhatsFlooding in Varaha Riverflood WarningKottakudi River
Share
Tweet
SendShare
Previous Post

இராமருக்கு தங்கக் காலணிகள்: அயோத்திக்கு பக்தர் நடைப்பயணம்!

Next Post

இந்தியாவில் 756 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies