இலங்கையின் திடீர் மாற்றம்: சீன ஆய்வுக் கப்பல்களுக்கு அதிரடித் தடை!
Apr 29, 2026, 05:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கையின் திடீர் மாற்றம்: சீன ஆய்வுக் கப்பல்களுக்கு அதிரடித் தடை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 7, 2024, 01:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கையில் சீன ஆய்வுக் கப்பல்கள் நிறுத்தப்படுவது குறித்து இந்தியா கவலை தெரிவித்து வந்த நிலையில், அந்நாட்டு கடல் பகுதிக்குள் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் நுழைவதற்கு இலங்கை அரசு ஓராண்டுக்கு தடை விதித்திருக்கிறது.

இலங்கை புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. எனவே, இங்குள்ள கொழும்பு துறைமுகப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக ஆராய்ச்சி என்கிற பெயரில் சீனாவின் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்ட சம்பவங்கள் அரங்கேறி வந்தன.

குறிப்பாக, சீனாவில் இருந்து ஷின்யான் 1, 2, 3 மற்றும் ஷியாங் யாங் ஹங் 1, 3, 6, 16 உள்ளிட்ட உளவு மற்றும் போர் கப்பல்கள் இலங்கைக்கு வந்திருக்கின்றன. இந்த சூழலில், கடந்த ஆண்டு அதி நவீன வசதிகள் கொண்ட சீனாவின் “ஷி யான் 6” எனும் கப்பல், கொழும்பு துறைமுகத்தில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதேபோல், 2022-ல் “யுவான் வாங் 5” எனும் சீன கப்பல், இலங்கையின் தெற்கே உள்ள ஹம்பந்தோடா துறைமுகத்தில் 7 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த உளவுக் கப்பல்கள் மூலம் 750 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களை துல்லியமாக கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இதனால், இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், நிலைகளையும் கண்காணிக்க இந்தக் கப்பல்கள் பயன்படுத்தப்படலாம் என்கிற கவலையை இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் எழுப்பி வந்தது.

குறிப்பாக, இலங்கைக்கு மிக அருகில் இருக்கும் இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளிட்ட 6 கடற்படை தளங்களை நவீன கருவிகள் மூலம் கண்காணிக்க வாய்ப்பு இருப்பதால் சீனக் கப்பல்களை நிறுத்த இந்தியா கடும் எதிர்ப்பும் தெரிவித்தது.

மேலும், சீன உளவுக் கப்பல்களை தங்கள் கடற்பகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது என்று இலங்கைக்கு இந்தியா வலியுறுத்தி வந்தது. ஆனாலும், இந்த எதிர்ப்பையும் மீறி இலங்கை அரசு சீனக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கியது. இதற்கு, இந்தியாவும், அமெரிக்காவும் கவலை தெரிவித்து வந்தன.

இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பில் மற்றொரு அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலான “சியாஸ் யாஸ் ஹாஸ்-3” என்ற கப்பலை இம்மாதம் 5-ம் தேதி முதல் மே மாதம் வரை நிறுத்துவதற்காக சீனா அனுமதி கோரியது. இலங்கை மற்றும் மாலத்தீவு கடற்பகுதியில் ஆய்வு நடத்தப் போவதாக சீனா கூறியது.

இப்படிப்பட்ட சூழலில்தான், சீனக் கப்பல் இலங்கைக்கு வர அந்நாட்டு அரசு தடை விதித்திருக்கிறது. அதாவது, கடந்த ஆண்டு பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேவிடம் இந்திய பாதுகாப்பு கவலைகளுக்கு மதிப்பு அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, இந்தியாவின் இக்கோரிக்கையை ஏற்று சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கை துறைமுகத்துக்குள் நுழைய ஒரு ஆண்டு தடை விதித்து இலங்கை அரசு உத்தரவிட்டிருக்கிறது. எந்தவொரு ஆராய்ச்சிக் கப்பலையும் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தவோ அல்லது செயல்படவோ அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை தெரிவித்திருக்கிறது.

இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நிலுக கதுருகமுவ கூறுகையில், “வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கான தடைக் காலம் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். இந்த காலக்கட்டத்தில் உள்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தங்கள் திறனை மேம்படுத்த முடியும்” என்று கூறியிருக்கிறார்.

எனினும், இலங்கை அரசின் இந்த முடிவு சீனாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: srilankachina shipBanned
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு – 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Next Post

இரு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies