இஸ்ரோவில் பாலின பாகுபாடு இல்லை - ஆதித்யா எல்-1 திட்டத்தின் இயக்குநர் நிகர் சாஜி!
Sep 12, 2026, 01:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரோவில் பாலின பாகுபாடு இல்லை – ஆதித்யா எல்-1 திட்டத்தின் இயக்குநர் நிகர் சாஜி!

Murugesan M by Murugesan M
Jan 8, 2024, 02:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 திட்டத்தின் இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் படித்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி, இஸ்ரோவில் பாலின பாகுபாடு இல்லை என்று கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2 ஆம் தேதி சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் எனும் எல்-1 புள்ளியில், பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை சமமாக இருக்கும்.

அந்தப் புள்ளியில் ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 திட்டத்தின் இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் படித்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி, இஸ்ரோவில் பாலின பாகுபாடு இல்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து இவர், ” பெண்கள் இஸ்ரோவில் பணிபுரிவதற்கு எந்தவொரு தடையும் கிடையாது. இஸ்ரோவில் பணிபுரிய திறமை மட்டும்தான் முக்கியமே தவிர, அவர்கள் எந்த பாலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதெல்லாம் முக்கியமில்லை. திறமைக்கு மட்டுமே முக்கியம் கொடுக்கப்படும்.

ஆதித்யா ஒரு சிக்கலான அறிவியல் செயற்கைக்கோள். ஒன்பது வருடங்களாக அயராது உழைத்திருக்கிறோம். இத்தகைய பலதரப்பட்ட பணி கலாச்சாரங்களைக் கொண்ட இந்திய அறிவியல் நிறுவனங்களுடன் பணிபுரிவது ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்தது ” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை கிராமத்தில் பிறந்து வளர்ந்த நிகர், நோபல் பரிசு பெற்ற மேரி கியூரியைப் பற்றி அறிந்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை செய்ய ஆர்வம் கொண்டதாகச் சொல்கிறார்.

Tags: Aadhitya L-1ISRO Chairman
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

ஜல்லிக்கட்டுக்கு சிக்கல்? சீராய்வு மனுவை விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் பரிசீலனை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies