வெளிநாடு வாழ் தமிழர்களின் பொங்கல் கொண்டாட்டம்!
May 1, 2026, 02:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளிநாடு வாழ் தமிழர்களின் பொங்கல் கொண்டாட்டம்!

Murugesan M by Murugesan M
Jan 15, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை எந்த அளவிற்கு உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறதோ, அதேபோல வெளிநாடுகளில் உள்ள தமிழர்களாலும் பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தை மாதம் முதல் நாள் அன்று உலகிற்கு வெளிச்சம் கொடுத்து விளைச்சலுக்கு உறுதுணை புரியும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புது பானையில் பொங்கல் வைத்து, பொங்கி வரும் அழகைப் பார்த்து ரசித்து, குடும்பத்துடன் சேர்ந்து பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக கூறி, வெல்லம் கலந்து நெய் ஊற்றி சூரியனுக்கு படையலிட்டு வழிபடுவார்கள் தமிழர்கள். மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகளை வழங்கி, வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்வர்.

நவீன கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால், தமிழர்கள், தங்களின் சொந்த ஊர்களை விட்டு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்து வருகின்றனர்.

தமிழர்கள் எங்கு சென்றாலும், தங்களுடைய கலாச்சார பாரம்பரியங்களைக் கைவிடுவது இல்லை. அதேபோல பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட மறப்பதும் இல்லை. அந்த வகையில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஆப்பிரிக்கா, டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஆசியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பொங்கல் பண்டிகை சிறப்பாகவும், வெகு விமரிசையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர்களுடன் இணைந்து மற்ற நாட்டினரும் பொங்கல் பண்டிகையினைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

Tags: Pongal Cultural Festival
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் பண்டிகை : குறைந்து வரும் பானைகளின் பயன்பாடு!

Next Post

தமிழ் சினிமாவின் பொங்கல் பாடல்கள்!

Related News

எங்கும் தாமரை மலர்வதை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது – ஷெசாத் பூனாவாலா

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு புதிய விதிமுறை – நாளை முதல் அமல்!

பெங்களூரு அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – விஜய் மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை!

3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி – பிரதமர் மோடி

மேற்குவங்க இறுதிகட்ட தேர்தல் – 91.71 % வாக்குகள் பதிவு!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

புதுச்சேரியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies