வருவாய் ஏற்றத்தாழ்வு குறைந்து வளர்ச்சி அதிகரிக்கிறது -எஸ்பிஐ ஆராய்ச்சி அறிக்கை!
Sep 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வருவாய் ஏற்றத்தாழ்வு குறைந்து வளர்ச்சி அதிகரிக்கிறது -எஸ்பிஐ ஆராய்ச்சி அறிக்கை!

Murugesan M by Murugesan M
Jan 8, 2024, 06:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வருவாய் ஏற்றத்தாழ்வு குறைந்து வளர்ச்சி அதிகரிக்கிறது என எஸ்பிஐ ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) ஆராய்ச்சியின் மூலம் சமீபத்திய ஆண்டுகளில் வருவாய் ஏற்றத்தாழ்வு குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது அதிகரிக்கும் வருவாய், இந்திய நடுத்தர வர்க்கத்தின் ஏற்றம் ஆகியவற்றின் மூலம் மேல்நோக்கிச் செல்கிறது.

2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டில் 70 மில்லியனில் இருந்து 2022-23-ம் மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்யும் நபர்களின் எண்ணிக்கை 74 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தரவுகளை மேற்கோள் காட்டி அறிக்கை கூறுகிறது.

2013-14, 2021-22 மதிப்பீட்டு ஆண்டுகளில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டும் தனிநபர் வரி செலுத்துவோர் தாக்கல் செய்த வருமானவரி கணக்குத் தாக்கல் 295% அதிகரித்துள்ளது, இது மொத்த வருமானத்தின் அதிக வரம்பிற்கு இடம்பெயர்வதற்கான சாதகமான போக்கைக் காட்டுகிறது என்று எஸ்பிஐ அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.

ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் தாக்கல் செய்த வருமானவரி கணக்குத் தாக்கல்கள் எண்ணிக்கையும் இதே காலகட்டத்தில் சுமார் 3 மடங்கு (291%) அதிகரித்துள்ளது.

ரூ.10 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் முதன்மையான 2.5% வரி செலுத்துவோரின் பங்கு 2013-14-ம் ஆண்டில் 2.81 சதவீதத்திலிருந்து 2020-21 ஆம் ஆண்டில் 2.28 சதவீதமாக குறைந்துள்ளது.

“2014-ம் நிதியாண்டில் மிகக் குறைந்த வருவாய் ஈட்டும் தனிநபர் வருமானவரி கணக்குத் தாக்கல் செய்பவர்களில் 36.3 சதவீதம் பேர் மிகக் குறைந்த வருமான வரம்பை விட்டு வெளியேறி மேல்நோக்கி நகர்ந்துள்ளனர்.

இதன் விளைவாக 2014-2021 நிதியாண்டில் அத்தகைய நபர்களுக்கு 21.1 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது” என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் பெண் தொழிலாளர் பங்கேற்பு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வருமான நிலைகளில் காணக்கூடிய சிறப்பம்சங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு பதிலாக நான்கு சக்கர வாகனங்கள், டிராக்டர்களின் அதிகரித்த விற்பனை போன்ற  கொவிட் தொற்றுநோய்க்குப் பிறகு மாறிவரும் நுகர்வு முறை ஆகியவை இந்தியாவின் வலுவான பொருளாதார மீட்சியை குறிப்பிட்டுக் காட்டுவதாக எஸ்பிஐ அறிக்கை குறிப்பிடுகிறது.

Tags: SBISBI bankIncome inequality fallsgrowth rises - SBI Research Report!
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக ஆளுநரை சந்தித்த மத்திய அமைச்சர்!

Next Post

அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நேரடி ஒளிபரப்பு!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies