மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களால் ஏழைகளின் வாழ்க்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளது! - பியூஷ் கோயல்
Sep 12, 2026, 10:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களால் ஏழைகளின் வாழ்க்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளது! – பியூஷ் கோயல்

Murugesan M by Murugesan M
Jan 9, 2024, 03:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவை வல்லரசாக மாற்றுவதற்கு ஒவ்வொரு இந்திய குடிமகனின் பங்களிப்பும் மிகவும் அவசியம்  என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரை நிகழ்ச்சியில் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டார்.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இலவச இணைப்புகளை பயனாளிகளுக்கு வழங்கிய அமைச்சர்  பியூஷ்கோயல், முத்ரா திட்டம் மற்றும் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் தொகைக்கான காசோலைகளையும் அவர் வழங்கினார்.

கூட்டத்தில் உரையாற்றிய பியூஷ் கோயல்,

ஒவ்வொரு  மாநிலமும்,  முன்னேற்றம்  அடைந்து, 2047-ம் ஆண்டு வாக்கில்  நாட்டை  வளர்ச்சியடைந்த நாடாக  மாற்றவேண்டும் என்ற  இந்தியாவின்  பயணத்தில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழ்ப்புலவரும், தத்துவ ஞானியுமான திருவள்ளுவருக்கு மரியாதை  செலுத்திய திரு பியூஷ் கோயல், வள்ளுவரின் வழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பின்பற்றி  வருவதாகக் கூறினார்.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும்,  எந்தவித முன்னேற்றத்தையும்  காணாத ஏழை, எளிய,  நலிவடைந்த மக்களின்  வாழ்க்கையை வளம்பெறச் செய்வதற்காகத்  திருவள்ளுவர் வழியில்  பிரதமர் பாடுபட்டு வருகிறார் என்று கூறினார்.

கடந்த பத்து ஆண்டுகளாக, ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள்,  பெண்களின் வாழ்க்கை மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களால்  மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக  கூறினார்.

நாட்டில் மக்கள் ஒருவருக்கொருவர்  நெருங்கிய தொடர்புகொள்ளும்  வகையில்,  அரசு பல்வேறு  முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். காசி தமிழ் சங்கமம்,  சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் ஆகியவை பல்வேறு  மாநிலங்களின் மக்கள் மற்ற  மாநிலங்களின் வளமான  கலாச்சாரம் மற்றும்  பாரம்பரியம் பற்றி  பரஸ்பரம்  புரிந்துகொள்ள மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளாகும் என்று கூறினார்.

தமிழ் நாட்டில்  வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரை மிகப்பெரிய  வரவேற்பை பெற்றுள்ளது என்று  கூறியவர், இந்த யாத்திரை முகாம்களில் மக்கள்  தங்கள்  பெயர்களைப்  பதிவு செய்து, மத்திய அரசு  செயல்படுத்தி வரும் திட்டங்களின் பயன்களைப் பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பட்டியலிட்டவர், பிரதமரின்  ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ்,  3.5 கோடி மக்கள்  பயனடைந்துள்ளதாகவும்,  ஜன் தன்  வங்கித்  திட்டத்தின் கீழ், 1.5 கோடி பேர்  வங்கி நடைமுறையில்  சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

வீடுதோறும் குடிநீர்  திட்டத்தின்  கீழ், 1 கோடிக்கும் மேற்பட்ட  குடும்பங்களுக்கு  குழாய் இணைப்பு மூலம்  குடிநீர்  வழங்கப்படுவதாக  அவர் தெரிவித்தார்.  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ்,  51 லட்சம் பேர் பதிவு செய்திருப்பதாகவும்,  உஜ்வாலா திட்டத்தின் கீழ்,  40 லட்சம்  பேர் பயனடைந்து இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பிரதமரின் வீட்டுவசதித்திட்டம் , முத்ரா கடன் திட்டம், பிரதமரின் கிராம சாலைகள் திட்டம்,  மக்கள் மருந்தக மையங்கள் உள்ளிட்ட 17  திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்க்கைக்குப் பிரதமர்  உத்தரவாதம்  அளித்துள்ளார் என்று கூறிய அவர்,  தகுதியான மக்கள் மத்திய அரசின் நலத்திட்டங்களில் இணைந்து அவற்றின் பயன்களை வீட்டு வாசலிலேயே பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்  நிர்வாக இயக்குநர் ஸ்ரீமதி ஸ்ரீதரன்,  சென்னைப் பத்திரிகை தகவல் அலுவலகக் கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம். அண்ணதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: central government ministerpiyush goyal
Share
Tweet
SendShare
Previous Post

லட்சத்தீவுகளை காப்பாற்றிய சர்தார் வல்லபாய் பட்டேல்! 

Next Post

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் 2,40,000 பிளாஸ்டிக் நுண்துகள்கள்!

Related News

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies