2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலராக மாற வேண்டும்! - நிர்மலா சீதாராமன்
Sep 12, 2026, 04:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலராக மாற வேண்டும்! – நிர்மலா சீதாராமன்

Murugesan M by Murugesan M
Jan 11, 2024, 03:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2047-க்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு கிஃப்ட் சிட்டி நுழைவாயிலாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் (கிஃப்ட் சிட்டி) இந்தியாவின் நிதி மற்றும் முதலீட்டு மையத்திற்கான நுழைவாயிலாகத் திகழ்கிறது என்று மத்திய நிதி, பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

காந்திநகரில் இன்று (11.01.2024) 10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘கிஃப்ட் சிட்டி-நவீன இந்தியாவின் விருப்பம் ‘ என்ற கருத்தரங்கில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கான தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி 2007-ம் ஆண்டில் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது கிஃப்ட் சிட்டி என்ற எண்ணத்தை உருவாக்கினார் என்றும், இப்போது அது ஒரு பெரிய சர்வதேச நிதி மையமாக விரிவடைந்துள்ளது என்று கூறினார்.

பசுமை தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை விளக்கிய திருமதி சீதாராமன், கிஃப்ட் சிட்டி பசுமை கடன்களுக்கான தளமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலராக மாற வேண்டும் என்ற இலக்கை அடைய பல்வேறு ஃபின்டெக் ஆய்வகங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

சர்வதேச நிதிச் சேவை மையங்களில் வளர்ந்து வரும் செயல்பாடுகளை பட்டியலிட்ட திருமதி சீதாராமன், கிஃப்ட் சிட்டியில் இப்போது 9 வெளிநாட்டு வங்கிகள், 25 வங்கிகள், 80 நிதி மேலாளர்கள், 50 தொழில்முறை சேவை வழங்குநர்கள், 40 நிதிநுட்ப  நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்பம், நிதி சூழலின் ஒருங்கிணைப்பாக கிஃப்ட் சிட்டியை விவரித்த மத்திய நிதியமைச்சர், தொழில்நுட்பத்தின் நன்மைகளை நிதிச் சேவைகளில் புகுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும், உலகளாவிய நிதியை அணுகுவதில் இந்தியாவின் தொழில்முனைவோருக்கு நன்மைகளை வழங்க கிஃப்ட் சிட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

பெரும்பாலான உலகளாவிய நிதி மையங்கள் முன்பு மூலதனத்தை மட்டுமே பார்த்தன, ஆனால் கிஃப்ட் சிட்டி தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட நிதி சேவைகளைப் பெற்ற பெருமைக்குரியது என்று கூறினார்.

Tags: BJP Nirmala Sitharaman
Share
Tweet
SendShare
Previous Post

நாடாளுமன்ற தேர்தல் : தேர்தல் ஆணையம் ஆலோசனை!

Next Post

காஷ்மீரில் அமைதி : மறைமுக யுத்தத்தில் எதிரிகள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies