ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது மீண்டும் தாக்குதல் – அதிரடி காட்டும் அமெரிக்கா!
Sep 12, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது மீண்டும் தாக்குதல் – அதிரடி காட்டும் அமெரிக்கா!

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 01:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடியை இஸ்ரேல் கொடுத்து வருகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால், செங்கடல் வழியாக செல்லும், இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் கப்பல்கள் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலைத் தடுக்க, அங்கு அமெரிக்கா போர் கப்பல்களை நிலை நிறுத்தியுள்ளது. இந்த கப்பல்கள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. அதை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கண்டு கொள்ளாமல், கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வந்தனர்.

இதை அடுத்து, அமெரிக்கா, இங்கிலாந்து கூட்டுப்படை ஒன்றிணைந்து ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து சரமாரி தாக்குதலை நடத்தினர். இந்த ஒருங்கிணைந்த இராணுவ தாக்குதலில் போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் ஈடுபட்டன.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்புடைய இடங்களை குறிவைத்து அமெரிக்காவும், இங்கிலாந்தும் நடத்திய தாக்குதலில், 5 பேர் உயிரிழந்ததாக ஹவுதி அமைப்பு கூறியுள்ளது. அத்துடன், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை நடத்தத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏமனில் ரேடார் வசதியை அமெரிக்கப் படைகள் குண்டுவீசித் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags: Attack again on the Houthi rebels – America shows action!
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவில் சூறாவளி புயல்: 2,000 விமானங்கள் ரத்து!

Next Post

போப்பிற்கு சோனியா எழுதிய பழைய கடிதம் வைரல்! 

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies