பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் விருது: திரௌபதி முர்மு 22-ம் தேதி வழங்கல்!
Aug 5, 2026, 07:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் விருது: திரௌபதி முர்மு 22-ம் தேதி வழங்கல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 20, 2024, 12:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 9 சிறுவர்கள், 10 சிறுமிகளுக்கு இந்த ஆண்டுக்கான பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருதை வரும் 22-ம் தேதி வழங்குகிறார்.

கலை மற்றும் கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, சமூக சேவை உட்பட 6 துறைகளில் சிறந்து விளங்கும் 5 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்திய அரசாங்கம் பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த விருது பெறும் ஒவ்வொருவருக்கும் ஒரு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது, கலை மற்றும் கலாச்சாரம் (7), துணிச்சல் (1), புத்தாக்கம் (1), அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (1), சமூக சேவை (4), விளையாட்டு (5) ஆகிய பிரிவுகளில் சிறந்து விளங்கிய 18 மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 9 சிறுவர்கள், 10 சிறுமிகள் என மொத்தம் 19 பேருக்கு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “2024-ம் ஆண்டுக்கான பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது, 9 சிறுவர்கள், 10 சிறுமிகள் என மொத்தம் 19 பேருக்கு வழங்கப்படுகிறது. இவ்விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் 22-ம் தேதி விக்யான் பவனில் நடைபெறும் விழாவில் வழங்குகிறார்.

தொடர்ந்து, பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் ஜனவரி 23-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உரையாடுகிறார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மாநில அமைச்சர் முன்ஜ்பரா மகேந்திரபாய் ஆகியோர் விருது பெற்ற குழந்தைகளுடன் உரையாடி வாழ்த்துவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: PresidentDraupathi murmuPradhan Mantri Rashtriya Bal Puraskar
Share
Tweet
SendShare
Previous Post

“அயோத்தி ராமர் கோவிலுக்கு நிச்சயம் செல்வேன்”- ஹர்பஜன் சிங்!

Next Post

தஞ்சையில் கோர விபத்து – 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies