ஆம் ஆத்மியில் இருந்து விலகிய நிர்வாகி பா.ஜ.க.வில் ஐக்கியம்!
Sep 12, 2026, 03:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய நிர்வாகி பா.ஜ.க.வில் ஐக்கியம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 21, 2024, 05:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும் ஆம் ஆத்மியின் முடிவை எதிர்த்து அக்கட்சியில் இருந்து விலகிய அசோக் தன்வார், டெல்லியில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக, எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து “இண்டி” கூட்டணியை அமைத்திருக்கின்றன. இக்கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்திருக்கிறது. இந்த சூழலில், நாடாளுமன்றத் தேர்தலுடன் ஹரியானா மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் முடிவில் ஆம் ஆத்மி கட்சி இருக்கிறது. இது அக்கட்சியிலுள்ள பல்வேறு நிர்வாகிகளுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், ஆம் ஆத்மி கட்சியிலுள்ள பலரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள்தான்.

ஆகவே, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும் ஆம் ஆத்மி கட்சியின் முடிவை எதிர்த்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான அசோக் தன்வர் கடந்த வியாழக்கிழமை விலகினார். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு தன்வர் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

அக்கடிதத்தில், “தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடனான உங்கள் கூட்டணியின் பார்வையில், ஆம் ஆத்மி கட்சியின் ஹரியானா மாநில தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராகத் தொடர எனது நெறிமுறைகள் என்னை அனுமதிக்காது.

எனவே, ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட மற்ற அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நான் விலகிக்கொள்கிறேன். மேலும், இந்த நாட்டின் பொறுப்புள்ள குடிமகனாக மாணவப் பருவத்தில் இருந்தே தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். அரசியல் சாசனம், நாடு மற்றும் மக்களை முதன்மையாக நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், அசோக் தன்வார் டெல்லியில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் தன்வர் இணைந்திருப்பது பா.ஜ.க.வுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று நம்பப்படுகிறது.

Tags: aam aadmi partyHaryanaAshok DhanwarJoins BJP
Share
Tweet
SendShare
Previous Post

ஐயப்பன் கோவிலில் குவிந்த வருமானம்: எத்தனை கோடி தெரியுமா?

Next Post

பெங்களூரு புல்ஸ் – தமிழ் தலைவாஸ் அணிகள் இன்று மோதல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies