பிசிசிஐ விருதுகள் : வெற்றியாளர்கள் யார்?
Nov 4, 2026, 03:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிசிசிஐ விருதுகள் : வெற்றியாளர்கள் யார்?

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 10:40 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறந்த வீரர், வீராங்கனை மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா இன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

அதன்படி இன்று ஹைதராபாத்தில் பிசிசிஐ சிறந்த இந்திய வீரர், வீராங்கனை மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்க உள்ளது.

இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு வழங்கப்படவுள்ளது. அதே போன்று சிறந்த வீரருக்கான விருது சுப்மன் கில்லுக்கு வழங்கப்டுள்ளது.

இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவி சாஸ்திரி 80 டெஸ்ட் மற்றும் 150 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 15 சதங்கள் உட்பட 6938 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் 280 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

1983 ஆம் ஆண்டு இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற போதும், 1985 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்ற போதும் இந்திய அணியில் ஒரு அங்கமாக இருந்த ரவி சாஸ்திரி அதோடு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ச்சியாக வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

அதுமட்டுமின்றி இரண்டு முறை இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இப்படி தொடர்ச்சியாக கிரிக்கெட் உடனே பயணிக்கும் இவருக்கு பி.சி.சி.ஐ வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கவுள்ளது.

கடந்த 2006-2007 ஆம் ஆண்டுகளில் முதல் முறையாக பிசிசிஐ விருதுகள் வழங்கப்பட்டன. சி. கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது முதன் முதலில் 1994 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இது முன்னாள் வீரருக்கு பிசிசிஐ வழங்கும் மிக உயர்ந்த கௌரவமாகப் பார்க்கப்படுகிறது.

பிசிசிஐ விருதுகள் கடைசியாகக் கடந்த 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதன் பிறகு இந்த 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பிசிசிஐ தற்போது விருதுகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: BCCIindian cricket team
Share
Tweet
SendShare
Previous Post

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

Next Post

தென் ஆப்பிரிக்கா தொடர் : இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி!

Related News

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

ஆயிரக்கணக்கான பிராய்லர் கோழிகள் திடீரென உயிரிழப்பு; கால்நடைத்துறை ஆய்வு

வின்ஃபாஸ்ட் காரில் பெயிண்ட் பிரச்சனை; பல மாதங்களாக அலைக்கழிப்பதாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு

காவல்துறை பிடியில் இருந்து தப்பிய கைதி கைது; காவல்துறை அதிரடி

சொகுசுப்பேருந்து மோதி கவிழ்ந்த லாரி; சாலையில் சிதறிய பாட்டில்கள்

பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளோம்; பிரதமர் மோடி பெருமிதம்

Load More

அண்மைச் செய்திகள்

சரியப்போகும் தங்கம் விலை : காத்திருக்கும் ட்விட்ஸ்ட் |: உஷாராகும் முதலீட்டாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திராவுக்கு கைமாறிய தென்கொரிய நிறுவனங்களின் ரூ. 1614 கோடி முதலீடு – பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

சேலத்தில் திமுக கவுன்சிலர், மாநகராட்சி ஆணையர் மோதல்; கைகலப்பு

முரசு புயல் எதிரொலி – சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் – மதுப்பிரியர்கள் சாலை மறியல்!

இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி பேரம் – அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி – எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசின் செயல்பாடுகளில் மக்கள் பங்களிப்பு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

முரசு புயல் பாதிப்பு – தமிழக முதல்வரிடம் உதவி கோரினார் ஆந்திர முதல்வர்!

ஆந்திராவில் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது முரசு புயல் – சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies