புதுதில்லியில் இருந்து சித்த மருத்துவ ஆரோக்கிய பேரணி நாளை தொடக்கம்!
Sep 14, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுதில்லியில் இருந்து சித்த மருத்துவ ஆரோக்கிய பேரணி நாளை தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 05:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுதில்லியிலிருந்து கன்னியாகுமரி வரை முதலாவது சித்த மருத்துவ ஆரோக்கியப் பேரணி நாளை தொடங்குகிறது

தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமமும் இணைந்து முதன்முறையாக புது தில்லியிலிருந்து கன்னியாகுமரி வரை சித்த மருத்துவ ஆரோக்கியப் பேரணி மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நாளை முதல் பிப்ரவரி  12  வரை நடத்துகிறது.

10 என்ஃபீல்டு 350 சிசி புல்லட் பைக்களைப் பயன்படுத்தி இந்தப் பேரணி நடத்தப்படும். இந்த இரண்டு நிறுவனங்களின் சித்த மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள், வாகன ஓட்டுநர்களாகப் பங்கேற்பார்கள்.

சித்தர் தினம் 2023 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அகில இந்திய அளவில் சித்த மருத்துவ முறையின் சிறப்பு மற்றும் பயன்களை பரப்புவதற்காக இந்தப் பிரச்சாரப் பேரணி நடத்தப்படுகிறது.

இந்தப் பேரணியை புதுதில்லியில் இருந்து ஆயுஷ் துறை, துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார்.

ஆயுஷ் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் முஞ்பாரா மகேந்திர பாய், ஆயுஷ் துறை செயலர் திரு வைத்யா ராஜேஷ் கொடேச்சா, ஆயுஷ் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பல பிரமுகர்கள்  இதில் பங்கேற்கின்றனர்.

இந்தப் பயணக்குழு வரும் வழியில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 21 நகரங்களில் நிறுத்தப்படும். நிறுத்தும் இடங்களில் பிராந்திய முகமைகள், பிராந்திய பங்கேற்பாளர்கள் மற்றும் துணைக்குழுவுடன் இணைந்து இக்குழுவினர் விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.  துண்டுப் பிரசுரங்கள், மருந்துப் பெட்டிகள், சிற்றேடுகள், சித்த மருத்துவப் பெட்டிகள் போன்றவற்றை விநியோகிப்பார்கள்.

இந்தக் குழுவின் பயணம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் முடிவடையும்போது, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சித்த மருத்துவ வல்லுநர்கள், பல்வேறு சித்த மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்பார்கள்.

தற்போதைய சூழலில் முக்கியத்துவம் பெற்று வரும் ஆயுஷ் முறைகளின் ஓர் அங்கமான சித்த மருத்துவ முறையின் பரவலுக்கு இதுவரை கண்டிராத நிகழ்வாக இது இருக்கும் என்று ஆயுஷ் துறை இணைச்செயலாளர் பேராசிரியர் மீனாகுமாரி கூறினார்.

Tags: Siddha Medical Health Rally starts tomorrow from New Delhi!
Share
Tweet
SendShare
Previous Post

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் அரையிறுதிக்குத் தகுதி!

Next Post

புதுச்சேரியில் சரிந்து விழுந்த 3 மாடி கட்டடம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies